வில்லியனுாரில் இன்று பவுர்ணமி நடைபயணம் | Dinamalar
வில்லியனுார்-வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு, ஆன்மிக நடைபயணம் இன்று துவங்குகிறது.வில்லியனுாரில் பிரசித்திபெற்ற திருக்காமீஸ்வரர் கோவில்உள்ளது.சுற்றுப்புற பகுதிகளில்,ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையை போல, வில்லியனுாரில் பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கி, மாட வீதிகள் வழியாக ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பகுதியில் உள்ள பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம் சென்றடைவர்.அங்கிருந்து, வி.தட்டாஞ்சாவடி, மணவெளி, வழியாக காசி விஸ்வநாதர் கோவில், திருக்காஞ்சி … Read more