அடுத்தடுத்து மாயமாகும் உக்ரைன் மேயர்கள்! தொடரும் ரஷ்ய அட்டூழியம்

உக்ரைனின் கெர்சனில் உள்ள துறைமுக நகரமான Skadovsk-ன் மேயர் கடத்தப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். Skadovsk-ன் மேயர் Oleksandr Yakovlyev மற்றும் துணை மேயர் Yurii Palyukh ஆகியோர் இன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். Skadovsk-ன் மேயர் கடத்தப்பட்டதை உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, உக்ரைனில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் தலைவர்களை ரஷ்ய படையெடுப்பாளர்கள் தொடர்ந்து கடத்துகின்றனர். Skadovsk மேயர் Oleksandr Yakovlyev மற்றும் துணை … Read more

வெற்றிப்பட இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி – சல்மான்கான் நடிக்கும் அடுத்த மெகா பட்ஜெட் படம்…

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எம். ராஜா எனும் மோகன் ராஜா. தொடர்ந்து எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் என்று தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான இயக்குனர் மோகன் ராஜா. தற்போது தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘காட்பாதர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி … Read more

ஜப்பானின் புகுஷிமா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் … Read more

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்யோ: ஜப்பானின் டோக்யோ அருகே கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1-ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம்.. டெஸ்லா தொழிற்சாலை மூடல்.. எலான் மஸ்க் கவலை..!

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து மக்களும், வர்த்தகமும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சமீபத்தில் இந்திய அரசு உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாட்டு விமானச் சேவையை அளிக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? … Read more

`கள்ளன்' திரைப்படத்துக்குத் தடை கோரி வழக்கு… உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

கள்ளன் திரைப்படத்தை தடை செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலான நிலையில், மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரு.பழனியப்பன், சந்திரா தங்கராஜ் எழுத்தாளர் சந்திரா இயக்கி, இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ள ‘கள்ளன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை சந்தித்து வருகிறது. இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கலைமணி அம்பலம் தாக்கல் செய்துள்ள மனுவில், “சந்திரா இயக்கி, கரு.பழனியப்பன் நடிக்கும் படத்திற்கு ‘கள்ளன்’ … Read more

ரஷ்யா கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த உக்ரைன்!

ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்க வேண்டும் என ரஷ்ய முன்வைத்த கோரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது. ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்குவது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரசமாக கருப்படலாம் என ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொர்பாளர் Dmitry Peskov கூறினார். இந்நிலையில், ஆஸ்திரியா அல்லது ஸ்வீடனுடன் ஒப்பிடக்கூடிய நடுநிலை நிலையை ஏற்றுக்கொள்ள, ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சர்வதேச படைகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன … Read more

தேர்தல் தோல்வியையொட்டி5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

டில்லி தேர்தல் தோல்வியையொட்டி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி உத்தரவுப்படி ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். அதையொட்டி கோவா, உத்தரகாண்ட் மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் உத்தரப்பிரதேச … Read more

நதிகளை மீட்போம் இயக்க பரிந்துரையின்படி 13 நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டம்- சத்குரு வரவேற்பு

கோவை: சத்குரு தொடங்கிய நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 13 நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு நேற்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது. இதை வரவேற்று சத்குரு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நன்றி சத்குரு. விரிவான திட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளை … Read more

தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை; தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல. நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து திராவிட மாடலில் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும் இவ்வாறு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.