விவரங்களை அறிந்து விமர்சனம் செய்யுங்கள்… அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம், எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கம் முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான் என்றும், அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்றும் அண்ணாமலை … Read more

ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16ம் தேதி வரை பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 5வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் மீது குற்றப்பத்திரிக்கை| Dinamalar

புதுடில்லி : ”அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் நிறுவன ஊழல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புத்துறைசெயலாளர் எஸ்.கே. ஷர்மா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. காங். தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது வி.வி.ஐ..பி.க்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த ‘அகஸ்டா வெஸ்லாண்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.3500 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை அளிக்க அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் விமானப் … Read more

தேர்தலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம்..!! – மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,   நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.  இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு … Read more

சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் முடிவு.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஏன்?

மும்பை: கடந்த அமர்வில் இந்திய சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்றும் சரிவு தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் பல்வேறு காரணிகளும் சந்தைக்கு எதிராகவே இருந்தன. இதற்கிடையிலும் இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தைகள் பலத்த ஏற்றத்தில் தொடங்கின. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆறுதலாய் அமைந்தது. முடிவிலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. அதேபோல அனைத்து துறைகளுக்கான குறியீடுகளும் நல்ல ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பல முக்கிய குறியீடுகளும் 2% மேலாக … Read more

டிவிஎஸ் ஜூபிடர் ZX ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் அறிமுகம்

கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் மாடல் ஆனால் தற்பொழுது ரூபாய் 80,973 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக் மற்றும் காப்பர் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கின்றது. TVS Jupiter ZX Smartxonnect டாப் வேரியன்டில் அறிமுகப்படுத்தப்பட்டு முழு டிஜிட்டல் கன்சோல், வாய்ஸ் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட் மற்றும் எஸ்எம்எஸ்/அழைப்பு எச்சரிக்கைகள் போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது. Smartxonnect அமைப்பில் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி Android மற்றும் … Read more

`கலையை மணந்தேன்; அதுவே என் கணவர்!' – இன்று Google கொண்டாடும் ரோசா போன்ஹூர்; யார் இவர்?

புகழ்பெற்ற விலங்கு ஓவியரான ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோசா போன்ஹூரின் 200-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் வரைந்த புகழ்பெற்ற செம்மறி ஆடுகளை கூகுள் நிறுவனம் தனது இன்றைய டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தவிர்க்க முடியாத பெண் ஓவியராகவும், விலங்குகளை வரைவதில் புகழ்பெற்றவராகவும் விளங்கிய ரோசா போன்ஹூர், பிரான்சின் போர்டோக்ஸில் 1822-ம் ஆண்டு பிறந்தார். இயற்கை சூழலை வரைவதில் வல்லவரான போன்ஹோரின் தந்தை, ஓவியங்களின் நுணுக்கங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் போன்ஹூருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். … Read more

உக்ரைன் போரால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா?: ஜேர்மன் மக்களுக்கு அரசு நிறுவனம் விடுத்துள்ள வேண்டுகோள்

உக்ரைன் போரால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், ஜேர்மன் மக்கள் குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களை வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ளார்கள். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் மாவு முதலான உணவுப்பொருட்கள் விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம், அத்துடன் அவற்றின் விலையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் இல்லை என்பது போல் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் துவங்க, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்துக்கு … Read more

மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…

சென்னை: பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்  அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் கூடி உற்சாகமாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.  அதிகாலையில் சர்வ அலங்காரத்தில் தேரில் ஏறிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் … Read more

டெல்லியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்றுதிரட்டும் மு.க.ஸ்டாலின்

சென்னை: டெல்லியில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் என தனித்தனியே அலுவலகம் உள்ளது. அந்த வகையில் தி.மு.க.வுக்கும் பிரமாண்டமான அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த அலுவலகம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லி செல்ல உள்ளார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் டெல்லி செல்கிறார்கள். தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைப்பதற்கு தி.மு.க. முடிவு செய்து உள்ளது. இதற்கான … Read more