உக்ரைன் இந்த ஐரோப்பிய நாடு போல் மாறினால்… போர் முடிவுக்கு வரும்! ரஷ்ய அறிவிப்பு

 பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்தியா போல் உக்ரைன் மாறினால், போர் முடிவுக்கு வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov கூறியதாவது, ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்குவது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரசமாக கருப்படலாம். இதுகுறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது, இது உண்மையில் சமரசமாக பார்க்கப்படும் என கூறினார். ரஷ்யா எதிர்பார்க்கும் ‘ராணுவமற்ற’ நிபந்தனைகள் என்ன என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. ஆனால், உக்ரைனிடம் ராணுவ படைகள் … Read more

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிப்பு – காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்!

சென்னை: நாளை முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மட்டும் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவைகள் குறைக்கப்பட்டு, தொற்று குறைந்ததும், மீண்டும் படிப்படியாக சேவைகள் அதிகரிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு … Read more

அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுகிறது- தி.மு.க. அரசை சாடும் ஜெயக்குமார்

திருச்சி: தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுதலையான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட பொய் வழக்கு காரணமாக மேலாண்மை நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இதனடிப்படையில் இன்று இரண்டாவது நாளாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன். இந்த விடியா தி.மு.க. அரசுக்கு தேர்தல் … Read more

நாட்டில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்னர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்

டெல்லி: நாட்டில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்னர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 23.30% குழந்தைகள் படுக்கையில் செல்போன்கள் பயன்படுத்துகின்றனர எனவும் தெரிவித்துள்ளார்.

தோனியை போன்று கூலானவர் முதல்வருக்கு சுமலதா புகழாரம்!| Dinamalar

மாண்டியா, : ”முதல்வர் பசவராஜ் பொம்மை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ‘கூல் கேப்டன்’ தோனியை போன்றவர்,” என்று மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.,சுமலதா கூறினார்.மாண்டியாவின் பாண்டவபுரா அருகே உள்ள மேலுகோட்டேயில் நடக்கும் வைரமுடி திருவிழாவில் நேற்று எம்.பி., சுமலதா பங்கேற்றார். அவர் கூறியதாவது:பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்ற பின், ஆறு மாத காலத்தில் பல முறை அவரை சந்தித்துள்ளேன். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை ஒரே கடிதத்தில் தருகிறீர்கள் அல்லவா என்பார்; எல்லாவற்றையும் பொறுமையுடன் … Read more

கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை போராட்டம் அறிவிப்பு..!!

புதுடெல்லி, கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவி நிபா நாஸ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே இன்று  சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டார். ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.  இந்நிலையில் … Read more

இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் இங்கு தான் நடந்துள்ளது..!

இந்தியாவில் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆய்வுகளுக்குப் பின்பு கடன் அளிக்கத் துவங்கியுள்ளது. ஆனாலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல வங்கிக் கடன்களில் மோசடி செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வங்கி மோசடிகளுக்குப் பின்பு இந்தியாவில் ஒவ்வொரு வங்கியின் வாராக் கடன், வங்கி மோசடிகள் அளவுகள் அதிகளவில் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் நடந்துள்ள இடம் பற்றிய … Read more

ரூ.6.39 லட்சத்தில் 2022 டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வந்தது

மாருதி பலேனோ காரின் அடிப்படையிலான டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா விற்பனைக்கு ரூபாய் 6.39 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 9.69 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. Toyota Glanza தோற்றத்தைப் பொறுத்தவரை, கிளான்ஸா ஆனது பலேனோவுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட LED DRL வடிவத்துடன் மாறுபட்ட கிரில், பம்பர் மற்றும் ஹெட்லைட் வடிவமைப்பைப் பெறுகிறது. 16-இன்ச் அலாய் வீல்களும் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன. புதிய கிளான்ஸா நான்கு டிரிம் நிலைகளில் வழங்கப்படுகிறது – அவை E, S, … Read more

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் கடைசி படம்… உருவான விதம் குறித்து மகன் ரன்பீர் கபூர் உருக்கம்!

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் கடந்த 2020-ல் மறைந்தார். ரிஷி கபூர், இயக்குநர் மற்றும் நடிகர் எனப் பல துறைகளில் பாலிவுட் சினிமாவில் வளம் வந்தவர். அவர் நடித்த ‘சர்மாஜி நாம்கீன்’ (Sharmaji Namkeen) எனும் படம் வரும் மார்ச் 31-ல் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 17 (நாளை) வெளியாகிறது. இதையொட்டி பேசிய ரன்பீர் கபூர், “அப்பாவின் மறைவிற்குப் பிறகு … Read more

சிக்கிய கோவில் குருக்கள்! கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருள்… விசாரணையில் அதிர்ச்சி

தமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமான வழக்கில் குருக்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சீர்காழி அருகே உள்ள மன்னங்கோவில் கிராமத்தில் 4 கோவில் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் வேறு கோவிலில் இருந்து 2 சிலைகளை மீட்டனர். அந்த 2 சிலைகளை கோவில் கருவறையில் குருக்கள் சூர்யமூர்த்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 சிலைகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. … Read more