உக்ரைனில் சிக்கி தவித்த 219 இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் மும்பை வந்தடைந்தது!

மும்பை, ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அந்த வகையில்,  சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம்  ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட்  நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு … Read more

உக்ரைன்-ரஷ்யா போர்: சமீபத்திய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தின் சமீபத்திய நிலை குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம். உக்ரைன் சனிக்கிழமையன்று போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக ரஷ்ய ஆலோசனைகளை நிராகரித்தது. ஆனால் இராணுவ மோதலை உக்ரைன் நீடிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டிய பின்னர் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை ஏற்க தயாராக இல்லை என்று கூறியுள்ளது. ரஷ்யப் படைகள் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் பீரங்கி மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் உக்ரேனிய நகரங்களைத் தாக்கின, ஆனால் … Read more

திமுகவிடம் மேயர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கும் காங்கிரஸ், விசிக…! முதலமைச்சர் ஸ்டாலின் அப்செட்

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், திமுகவிடம் மேயர் பதவி கேட்டு காங்கிரஸ், விசிக தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அப்செட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று (பிப்ரவரி 26) செய்தியாளரைச் சந்தித்த மாநிலகாங்கிரஸ் கட்சி அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகத் தெரிவித்தார். … Read more

ருமேனியாவில் இருந்து இந்திய மாணவர்களுடன் 2வது விமானம் டெல்லி வந்தது

புக்கரெஸ்ட்: உக்ரைனில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் … Read more

நேரு வீதி வணிகத் திருவிழா பரிசளிப்பு துவக்கம்| Dinamalar

புதுச்சேரி : நேரு வீதி வணிகத் திருவிழாவிற்கான நிச்சயப் பரிசு வழங்கும் பணியை சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி நேரு வீதி வணிகத் திருவிழா கடந்த ஜன.,1 முதல் பிப்.,15 ம் தேதி வரை நடந்தது. விழாவில் பங்கேற்ற வாடிக்கையாளர்களுக்கு நிச்சயப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.வள்ளலார் சாலை வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இசைக்கலைவன், நடராஜன், குகன், கணேசன் முன்னிலை வகித்தனர்.சிவசங்கர் … Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..! உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதாக கூறி மோசடி

போபால், உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  இதற்காக இந்திய அரசும் ஏற்பாடுகளை செய்துள்ளது.  ருமேனியா, போலந்து வழியே இந்திய குடிமக்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி அவர்களுடைய பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் … Read more

உக்ரைன் – தியாக தேசத்தின் வரலாறு: உக்ரைன் ஏன் ரஷ்யாவுக்குத் தேவைப்படுகிறது? பகுதி -1

பணக்கார நாடுகள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். வறுமைக்கோட்டுக்குக் கீழே நிறைய பேர் வசிக்கும் ஐரோப்பிய நாடு. பனியும் குளிரும் சூழ்ந்த ஐரோப்பாவில் அதிகமான விவசாய நிலங்கள் இருக்கும் நாடும் இதுதான். ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு இதுதான். நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்தப் பெரிய தேசத்தை ரஷ்யா விழுங்கப் பார்ப்பதுதான் தற்போது உலகின் தலைப்புச் செய்தி. ”நவீன கால உக்ரைன் ஒரு தனி தேசமாக எப்போதும் இருந்ததில்லை. … Read more

2வது டி20 போட்டியில் மாஸ் காட்டிய ஜடேஜா – இலங்கை தொடரை வென்றது இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று  தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 ஆட்டம் நடைபெற்றது.   இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட் செய்த … Read more

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் மாணவர்களில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று அங்கிருந்து 219 பேருடன் இந்தியா வரும் விமானத்தில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரஷியா உக்ரைன் மீது இன்று 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் வான்வெளியை ரஷியா தடுத்துள்ளதால், அங்குள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே ஏராளமானோர் உக்ரைனை விட்டு சாலை … Read more

இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி… இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 75 ரன்கள் குவித்தார். கேப்டன் சனகா 47 ரன்களும்,  குணதிலக 38 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் … Read more