சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழர் நலனுக்காகவும், தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் சற்றே அதிகரிக்க துவங்கிய கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (மார்ச் 14) 2,503 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, நேற்று (மார்ச் 15), 2,568 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கோவிட் பாதிப்பு சற்றே அதிகரித்து 2,876 ஆக பதிவானது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,876 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,98,938 ஆனது. கடந்த 24 மணி … Read more

ஜி ஜின்பிங் செய்த காரியத்தால் 1 லட்சம் கோடி டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் 2 நிறுவனங்கள்..!

சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் மக்கள் மத்தியிலும், வர்த்தகச் சந்தையிலும் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் ஜி ஜின்பிங் அரசு டெக் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்ததில் பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களை அதிகப்படியாகத் திரட்டுவதிலிருந்து மோனோபோலியாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல செயல் முறைகளைப் பயன்படுத்தி வருவதை அரசு கண்டுபிடித்தது. தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்! இதைத் தொடர்ந்து டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தை … Read more

“ ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபம் அடைகிறது!" – சோனியா காட்டம்

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய சோனியா காந்தி, “ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக பெரு நிறுவனங்களோடு ஆளும் கட்சி இணைந்து செயல்படுகின்றது. இதனால் ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இது தெரியும். அதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் லாபம் பார்க்கிறது. மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க-வின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் சலுகைகளை வழங்கியிருக்கிறது . பேஸ்புக் அரசோடு … Read more

உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்பிருக்கா? உறுதியாக கூறிய போரிஸ்

 உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, ஜெலன்ஸ்கி தங்களுடைய கோரிக்கையை ஏற்றால் உடனே தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் எக்காலத்திலும் நேட்டோவில் இணையக்கூடாது என்பது ரஷ்யாவின் கோரிக்கைகளில் முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான அதன் முயற்சியை கைவிடலாம் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேற்று கூறினார். ஜெலன்ஸ்கியின் கருத்து குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, … Read more

மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி வாக்குவாதம்! பணிந்தார் பியூஸ் கோயல்…

டெல்லி: மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பணிந்து, அவரது கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறையின் கீழ் மக்களவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளித்து வருகிறார். இந்த விவாதத்தின்போது, திமுக எம்.பி. கனிமொழி  ஒரே நாடு, ஒரே … Read more

நெல்லை அருகே என்கவுன்ட்டர்- தூத்துக்குடி ரவுடி சுட்டுக்கொலை

களக்காடு: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி என சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த இவர் 2019-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் நெல்லையில் பதுங்கி … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமைபாதுகாப்பு ஆணையம் சீலிட்ட கவரில் அறிக்கையை தர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி ஆணையம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. 

2 ஆண்டுக்கு பின் வழக்கு பதியும் மர்மம்!| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் 60 சவரன் நகைகளை திருடியதாக, டிரைவர் மீது இரண்டரை ஆண்டுகளுக்கு பின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதியில், 1974ல் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தனகாந்த்ராஜ். இவர் 2006ல் காலமானார். இவரது மனைவி பார்வதி, 75; ஏனாம் வெங்கடாசல பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வாரிசுகள் சிலர் வெளிநாட்டிலும், சிலர் புதுச்சேரியில் தனித்தனியாகவும் வசிக்கின்றனர். இவரது வீட்டில், வினோபா நகரைச் சேர்ந்த எட்வர்ட், … Read more

விரைவில் ரஷ்யாவுடன் ஆயில் டீல்.. முதல் வேட்டையைத் துவங்கிய இந்தியன் ஆயில்..!

ரஷ்ய அரசு இந்தியாவிற்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்ய ஆஃபர் கொடுத்த நிலையில், மத்திய அரசு இதை உடனடியாக ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்குக் கொண்டு வர பல பிரச்சனைகள் இருந்த நிலையில் இரு நாடுகளும் குழம்பிக் கொண்டு இருக்கையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட கோபத்தில் புதின்..!! ரஷ்ய கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து … Read more