போருக்கு மத்தியில் கீவ் நகரில் பிறந்த பெண் குழந்தை

உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவுக்குள் புகுந்தும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த போருக்கு மத்தியில் சுரங்கத்தில் பதுங்கி இருந்த 23 வயதான பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கீவ் நகரத்தில் … Read more

ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தனர்

மும்பை: ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தனர். ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நள்ளிரவு 2 மணிக்கு டெல்லி வரவுள்ளது.

பர்ஸை பதம் பார்க்க வரும் மார்ச் மாதம்.. மக்களை உஷார்..!

இந்தியாவில் ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்து இருக்கும் இந்த வேளையில் மக்களுக்குப் புதிய நெருக்கடி ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் வந்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதம் நடுத்தர மக்களின் குடும்பப் பட்ஜெட்டில் மிகப்பெரிய துண்டு விழுவது மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கும் மோசமான நிலை உருவாகியுள்ளது. இது வெறும் விலைவாசி மட்டும் … Read more

திருச்சி: நேரு ஆதரவாளருக்கு மேயர்! – துணை மேயர் பதவிக்கு மோதும் நேரு vs அன்பில் ஆதரவாளர்கள்!

திருச்சி மாநகராட்சியின் மேயர் பதவி யாருக்கு என உறுதியாகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் என இரு ஆளுமைகள் மையம் கொண்டுள்ள திருச்சி மாநகரின் துணை மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது எந்த அணியினர் என்பதற்கான கடும் போட்டியால் தமிழகமே உற்று நோக்கும் மாநகரமாக மாறியிருக்கிறது திருச்சி. திருச்சி மாநகராட்சி திருச்சி மத்திய மாவட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் வைரமணியின் கட்டுப்பாட்டிற்குள் 27 வார்டுகளும், தெற்கு மாவட்ட தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையின் கட்டுப்பாட்டிற்குள் … Read more

ரஷ்ய சரக்கு கப்பல் ஆங்கில கால்வாயில் சிறைபிடிப்பு: பொருளாதார தடைகளை மீறியதாக குற்றசாட்டு!

ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நடவடிக்கைகள் எடுத்துள்ளதை தொடர்ந்து, ஆங்கில கால்வாய் பயணித்த ரஷ்யாவின் Baltic Leader என்ற சரக்கு கப்பலை பிரான்ஸ் கடல் காவல்துறையினர் சிறைபிடித்துள்ளனர். பிரான்சின் நார்மண்டி பகுதியில் உள்ள ரூவெனில் இருந்து வாகனங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திற்கு சென்ற 416 அடி நீளம் கொண்ட Baltic Leader என்ற சரக்கு கப்பல் பிரான்ஸ் கடல் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் பலவும் … Read more

சென்னையில் நாளை 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! ககன்தீப் சிங் பேடி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை போலியோ சொட்டு … Read more

மெக்சிகோ ஓபன்- இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

மெக்சிகோவின் அகபல்கோவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனிஷ் மெத்வதேவை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நடாலிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெத்வதேவ் இன்று மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார். எனினும், நடாலை வீழ்த்த முடியவில்லை. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். … Read more

உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வந்த 16 தமிழர்கள் இன்றிரவு விமானம் மூலம் இந்தியா வருகை

கீவ்: உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வந்த 16 தமிழர்கள் இன்றிரவு விமானம் மூலம் இந்தியா வருகின்றனர். உக்ரைனில் சிக்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வப்ரியா உள்ளிட்ட 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் செல்வது ஏன்?

புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள். உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., படிப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் படிப்புக்கான செலவும் குறைவு. இதனால் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்கின்றனர். இதுகுறித்து பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், ”இந்தியாவில் தனியார் கல்லுாரியில் … Read more

எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?!

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகப் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் அனைவரும் மத்திய அரசின் எல்ஐசி ஐபிஓ-விற்காக காத்திருக்கும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய அரசு உருவாகியுள்ளது. எல்ஐசி ஐபிஓ-வில் PMJJBY பாலிசிதாரர்களுக்கு சலுகை கிடையாது.. பெரும் ஏமாற்றம்! எல்ஐசி ஐபிஓ இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஐபிஓ மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட்டு சுமார் 65000 கோடி ரூபாய் அளவிலான … Read more