`மொய்ப்பணம் மொத்தமும் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்துக்குத்தான்'-ஆச்சர்யப்படுத்திய மதுரைத் திருமணம்!

‘நீங்கள் வைக்கும் மொய்ப்பணம் அப்படியே ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கப்படும்..’ என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு மதுரையில் இன்று நடந்த திருமணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மொய்ப்பணம் உண்டியலில் மதுரையைச் சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த பாலகுமாருக்கும் இன்று காலை திருமணம் சிறப்பாக நடந்தது. இத்திருமணத்திற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்லத்தின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது உறவினர், … Read more

போருக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை செய்தி

உலகம், ரஷ்யாவைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை என்று சொல்லத் துடிப்பது போல் இருக்கிறது, சமீபத்தில் நடந்துள்ள சில சம்பவங்களைப் பார்த்தால்! வல்லரசு என கருதப்படும் ரஷ்யாவை சிறிய நாடாகிய உக்ரைன் சற்றும் பயப்படாமல் துணிந்து எதிர்த்து நின்றபோதே, உலக நாடுகள் பல மூக்கின் மேல் விரல் வைத்தன. இந்த விளையாட்டில் நான் இல்லையப்பா என சில நட்பு நாடுகளே ஒதுங்கிக்கொண்டன… இந்நிலையில், உக்ரைனில் கடுமையான போர் நடக்கும்போதே, அங்கு சென்று உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார்கள் மூன்று ஐரோப்பிய … Read more

ரூ.139 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சேப்பாக்கம் மைதானம்!

சென்னை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மைதானம் தற்போது ரூ.139 கோடி புதுப்பிட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ்நாட்டின் புகழை உலக நாடுகளிடையே பறைசாற்றுவதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சளைத்தது அல்ல. இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. 1916-ம் ஆண்டு முதல் இங்கு கிரிக்கெட் … Read more

கொரோனா பிடியில் இருந்து 19 மாவட்டங்கள் விடுபட்டன

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவியது. கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டு விட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாகவே கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த மாதத்தில் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்கள் கொரோனா தொற்றின் … Read more

உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழக அரசு மருத்துவர்கள் டி.எம்., எம்.சி.எச். படிக்க வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் டி.எம்., எம்.சி.எச். படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பை பலப்படுத்த இடஒதுக்கீடு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.      

சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை தொடர் சரிவு.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றும் 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையினை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்கலாம். எனினும் மீடியம் டெர்மில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. இதற்கிடையில் … Read more

மீண்டும் சூடுபிடிக்கும் `ரோல்ஸ் ராய்ஸ்' விவகாரம்; விஜய் vs அரசு; யாரிடம் இருக்கிறது சிக்கல்?

கடந்த 2012-ம் ஆண்டில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் `கோஸ்ட்’ எனும் சொகுசு காரை வாங்கும்போது, பின்னாளில் அது பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்பதை விஜய் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார். ஏனெனில், அவர் இந்தக் காரை வாங்கி பல ஆண்டுகள் ஆன பிறகும், அதற்கான நுழைவு வரி செலுத்துவதில் இருக்கும் விவகாரம் பூதாகரமாகி, இன்றும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பல வழக்குகள், பல்வேறு தீர்ப்புகள் என இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக இறக்குமதி வரியாக ரூ.1.88 … Read more

ஐபிஎல் 2022! அவமானப்படுத்தப்பட்ட சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்குகிறார்… ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்கவுள்ளார். ஆனால் இந்த முறை விளையாடும் வீரராக அவர் களமிறங்காமல் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு ஏலத்தில் அந்த அணி தக்கவைக்கவில்லை. முற்றிலுமாக புறக்கணிப்பு சரி ஏலத்திலாவது ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று பார்த்தால் ரெய்னவை சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து அணிகளும் … Read more

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை; பஞ்சாபில் மாநிவலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள பகவந்த்மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என டிவிட் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து,  பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று … Read more

பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்… உக்ரைனில் ரசாயன ஆயுத … Read more