லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றப்படவில்லை! எஸ்.பி.வேலுமணி விளக்கம்…

கோவை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றபடவில்லை  என்றும், வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்  என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார். அதிமுக ஆட்சியின்போது நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும், எஸ்.பி.வேலுமணி உள்பட பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்சஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த … Read more

பிஎஃப் மீதான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும் என்பதால்தான், ‘தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும்’ என்றார் பேரறிஞர் அண்ணா. தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால், நாடு நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லாத இந்தச் சூழ்நிலையில், … Read more

திருவாரூர் அருகே கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல்: 5 பேரை கைது செய்தது போலீஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மாங்குடியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடனுக்கு மதுபானம் தர மறுத்ததாக விற்பனையாளர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரனை 5 பேர் தாக்கினர்.

அமேசான் காடுகள்: `உலகின் நுரையீரல்' வறண்ட புல்வெளியாக மாறும் ஆபத்து… புதிய ஆய்வு சொல்வது என்ன?

75 சதவிகித அமேசான் மழைக்காடுகள் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தானாகவே மீளும் திறனை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது புதிய ஆய்வு. ‘Nature Climate Change’ இதழில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வுக் கட்டுரையின்படி, அமேசான் மழைக்காட்டில் முக்கால்வாசி, அதாவது 75% பகுதிகள் ‘Tipping Point’-ஐ எட்டிவிட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காடு அதன் இயல்பு நிலைக்கு இயற்கையாகவே திரும்பும் திறனை இழக்கும் புள்ளியையே ‘Tipping Point’ என்கிறார்கள். இதனால் ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் … Read more

மீன ராசிக்குள் நுழையும் சூரியன்! அதிக பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்.. இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். சூரியன் மீன ராசிக்குள் நுழையும் நாள் மீன சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரிய பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் அதிக பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதன்படி இந்த பெயர்ச்சியால் இன்றைய நாள் அதிக பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW      … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.52 லட்சம் சோதனை- பாதிப்பு 2,876

டில்லி இந்தியாவில் 7,52,818 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,876 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,98,938 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 98 அதிகரித்து மொத்தம் 5,16,072 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 3,884 பேர் குணமடைந்து இதுவரை 4,24,50,055 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 31,811 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 18,92,143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர்?- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராஜாமணி படேல், “இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுடைய குடும்பங்களுக்கு அரசால் எவ்வளவு உதவி வழங்கப்பட்டது?” என்று கேள்வி கேட்டார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில், “இந்தியாவில் கொரோனா வால் 2020 மார்ச் மற்றும் 2021 அக்டோபர் 31 வரையில், 4 லட்சத்து 58 ஆயிரத்து 186 பேர் இறந்தனர். தேசிய பேரிடர் … Read more

உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.5-ம் தேதி தொடங்குகிறது : 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.5-ம் தேதி தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவிற்காக பந்தல், தேர் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் ஆயுத தயாரிப்பு தீவிரம்; ரஷ்ய ஆயுதங்கள் இறக்குமதி 47% குறைந்தது| Dinamalar

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 21 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், 2017 – 21ல், உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில், 11 சதவீத … Read more

ஒரு பங்கு விலை 3,83,48,154.88 ரூபாய்.. அடேங்கப்பா..!

இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கும் MRF, ஹனிவெல் ஆட்டோமேஷன், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீ சிமெண்ட், 3எம் போன்ற விலை உயர்ந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கும். ஆனால் அதிகப்படியான விலை காரணமாக ரீடைல் முதலீட்டாளர்கள் இத்தகைய விலை உயர்ந்த பங்குகளை வாங்குவது இல்லை, ஆனால் பெரும் முதலீட்டாளர்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்கும் சில பங்குகளில் இந்த விலை உயர்ந்த பங்குகளாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு பங்கு விலை 3.83 … Read more