“2024-ல் காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது” – பிரசாந்த் கிஷோர் சொல்லும் தென் – கிழக்கு கணக்கு

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை எதிர்த்து களம் காண முடியுமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனால் ஒரு புறம் ஆம் ஆத்மி கட்சியும், மற்றொரு புறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸின் இடத்தை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. … Read more

பிரபல WWE குத்துச்சண்டை வீரர் மாரடைப்பால் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

முன்னாள் WWE வீரரான ஸ்காட் ஹால் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்கள் வரை அவர்களது காலக்கட்டத்தில் ஒளிபரப்பான WWE எனப்படும் பொழுதுப்போக்கு குத்துச்சண்டை என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம்.  காலத்தின் தேவைக்கேற்ப அது தன்னை மாற்றிக் கொண்டாலும் தங்களுடைய சூப்பர்ஸ்டார்களை இன்றளவும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  “Bad times don’t last, but bad guys do.” pic.twitter.com/Wvdh2wgCD2 … Read more

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம். பரந்து விரிந்து கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் புகழ் வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் இது. மிகப் பழமையான இக்கோயில் இப்போதும் பார்வைக்குப் பழசாகவே காட்சியளிக்கிறது. இக் கோயிலின் ஒரு வேளைப் பூசைக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. … Read more

மார்ச்-16: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

700 பேர் கல்வி செலவை ஏற்கிறது தெலுங்கானா அரசு| Dinamalar

ஐதராபாத்: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் கூறியதாவது: உக்ரைனில் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கல்வியை தொடர்வது குறித்து பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.இந்த மாணவர்களின் அனைத்து கல்வி செலவையும் மாநில அரசு ஏற்கும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ஐதராபாத்: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா … Read more

ஜோ பைடன் உட்பட பல அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ரஷ்யா தடை!

மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல அதிகாரிகளுடன் சேர்த்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இந்த நடவடிக்கைகள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருக்கும் பொருந்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ஒரு தனி அறிக்கையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது பல அமைச்சர்கள் உட்பட 313 கனேடியர்கள் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,073,060 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,073,060 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 461,527,690 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 394,856,810 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 64,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த அத்துமீறிய 4 மாணவர் மீது வழக்கு| Dinamalar

பெங்களூரு : கிரிக்கெட் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த நான்கு கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா — இலங்கை அணிகள் இடையிலான இரண்டா-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் போட்டியின் இரண்டாவது நாளான, 13ல் இந்தியா தனது பேட்டிங்கை முடித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து இலங்கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர். முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட இந்திய அணியினர் ‘பீல்டிங்’ செய்து கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில், விராட் … Read more

“கேப்டன் மாதிரியா நீங்க இருக்கீங்க” – ஆஸ்திரேலிய கேப்டன் செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  கராச்சியில் நடந்து வரும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்களில் சுருண்டது.  Pat Cummins doing some repair works on the pitch. … Read more

35 அணு ஆயுத போர் விமானங்களை வாங்கும் ஜேர்மனி!

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அமெரிக்க தயாரிப்பான F-35 ரக விமானங்களை ஜேர்மனி வாங்க உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தனது நாட்டின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கவுள்ளதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், ஜேர்மனி தனது பழைய டொர்னாடோ குண்டுவீச்சு விமானங்களுக்கு பதிலாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 35 எண்ணிகையிலான F-35A லைட்னிங் II விமானங்களை வாங்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் … Read more