ஜெ., பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு மோதிரம் – Jayalalitha

புதுச்சேரி ; ஜெ., பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு கிழக்கு அ.தி.மு.க., சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.மறைந்த தமிழக முதல்வர் ஜெ., 74வது பிறந்த நாளையொட்டி, கடந்த 24ம் தேதி பிறந்த, குழந்தைகளுக்கு புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., சார்பில், தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாநில செயலாளர் அன்பழகன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாராமன், பாஸ்கர், பெரியசாமி, மாநில இணைச் செயலாளர்கள் அன்பானந்தம், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் … Read more

ஊர் சுற்ற, பியூட்டி பார்லர், ஆடம்பர ஷாப்பிங்க்காக கம்பெனி பணத்தில் ரூ.53 கோடி செலவு செய்தாரா மாதுரி?

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் சில தினங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மாதுரி ஜெயின் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாயை நிறுவன பணத்தில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், தோண்ட தோண்ட பெரும் ஊழல்கள் வெளியாகி வருகின்றது. இந்த … Read more

ரஷ்ய அதிபர் புதினின் சொத்துக்கள் முடக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் செய்துவரும் நிலையில், அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் திட்டமிட்டுருப்பதாக மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. அதற்கேற்ப ரஷ்யா உக்ரைன் மீது வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா ராணுவம், அதன் பின்னர் தரைவழியாகவும் தாக்குதலை … Read more

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுங்கள்- உக்ரைன் ராணுவத்திற்கு புதின் அழைப்பு

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.   இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடக்குமுறையில் … Read more

டில்லியில் குறைந்தது கொரோனா இரவு நேர ஊரடங்கு வாபஸ்| Dinamalar

புதுடில்லி:டில்லியில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறுவதாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.தேசிய அளவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது போலவே, டில்லியிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரினர்.இதுதொடர்பாக, டில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் துணை நிலை கவர்னர் அனில் பைஜல் தலைமையில் நேற்று நடந்தது. இதில், … Read more

கர்நாடகத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா

பெங்களூரு,  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் இன்று 67 ஆயிரத்து 583 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 346 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1,349 பேர் குணம் அடைந்தனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.  இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கு கீழ் உள்ளது. உயிரிழப்பு விகிதம் … Read more

Wrok From Home மூலம் வருமானம் அதிகம்.. எப்படி தெரியுமா..?

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு இந்தியா முழுவதும் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் கலாச்சாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக இந்தக் கலாச்சாரத்தைப் பயன்படுத்த முடிவு செய்தது. இந்நிலையில் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் கலாச்சாரம் குறித்து முக்கியமான ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது. 4,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கும் வீ வொர்க்..! ரிமோட் வொர்க் – ஹைப்ரிட் மாடல் இன்டீட் நிறுவனம் செய்த ஆய்வில் கொரோனா தொற்றுக்குப் … Read more

ரஷ்ய வாகனங்களை ஒற்றை ஆளாக எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன்! மெய் சிலிர்க்கவைக்கும் காட்சி

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ வாகனங்கள் வாகனத் தொடரணியை தடுக்கும் முயற்சியில் துணிச்சலாக ஈடுபட்ட உக்ரைன் குடிமகனின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. 1989-ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் தியனன்மென் சதுக்கத்தில் (Tiananmen Square) ஒற்றை ஆளாக இராணுவ டாங்கிகளை எதிர்த்து இன்ற ‘டேங்க் மேன்’ மனிதரை நினைவூட்டும் வகையில், உக்ரைனிலும் ஒருவர் ரஷ்ய வாகனங்களை தனியொரு ஆளாக எதிர்த்து நின்றுள்ளார். உக்ரைனின் தெற்கில் உள்ள கிரிமியாவிற்கு அருகில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. … Read more

மார்ச் 4 ஆம் தேதி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெறுகிறது

சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தமிழக மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுள்ள்ன.  இந்த தேர்தல்களில் வெற்றி … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அவசர கால மீட்புக் குழுக்கள் – தமிழக பாஜக தகவல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக பாஜக சார்பில் அவசர கால தொடர்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹெல்ப் லைன் மூலம் எனக்கு கிடைக்கும் தகவல்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் இதர தமிழர்களின் நிலைமைகளை விளக்கி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு … Read more