சம்பளம், பதவி உயர்வில் துளியும் திருப்தி இல்லை.. கூகுள் ஊழியர்கள் பதிலால் சுந்தர் பிச்சை ஷாக்..!

உலகின் பிற முன்னணி நிறுவனங்களைப் போலவே கூகுள் 2 வருடங்களுக்குப் பின்பு தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய மிக முக்கியமான இலக்குகளைக் கையில் வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இதனால் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அடுத்தது என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, … Read more

காலநிலை மாற்றம்: `அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும்!' – அலெர்ட் கொடுக்கும் IPCC ஆய்வறிக்கை

வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான குழு (ஐபிசிசி). இது தொடர்பாகப் 2022 பிப்ரவரி 28-ம் தேதி, 67 நாடுகளைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்குகொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், `நவீன நுகர்வு வாழ்க்கை முறைகளால் இயற்கையை விட அதிகமான வெப்பம் ஏற்படுகிறது. அப்படி உருவாகும் அளவுக்கு அதிகமான வெப்பம் பூமியிலிருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதை வெளியேற்றுவதற்கான வழியை விரைவில் ஏற்பாடு செய்யாவிட்டால் பூமியில் … Read more

ரஷ்யா கீவ்வைக் கைப்பற்றத் தொடங்கினால்..ஜெலன்ஸ்கி எங்கு செல்வார்? தூதர் சொன்ன தகவல்

 ரஷ்யாவுடனான மோதலில் தேவைப்பட்டால் மரணம் வரை போராடவும் ஜெலன்ஸ்கி தயாராக இருப்பதாக பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym Prystaiko தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym … Read more

நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…!

டெல்லி: நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுவரை 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், நாளை முதல் 12 வயது முதல் 14 வயதுடையவர்களுக்கு கார்பெவாக்ஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிகறது. இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ,12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு நாளை (மார்ச் 16) முதல் https://www.cowin.gov.in/ என்ற கோவின் இணையதளத்தில்  தொடங்குகிறது. அதன்படி,12-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி … Read more

முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவை உயர்த்தகோரி 6 மாவட்ட விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்

மதுரை: முல்லை பெரியாறு அணையின் நீர் கொள்ளளவை 142 அடியாக உயர்த்த வேண்டும், அதற்கு முன்பாக பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும், அணையின் நிர்வாக அதிகாரங்களை தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லை பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை பழங்காநத்தத்தில் இன்று முல்லை பெரியாறு-வைகை பாசன … Read more

மாடூர் சுங்கச்சாவடியில் இலவசமாக பயணம் செய்யும் வாகனங்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணம் செய்தன.

தி காஷ்மீர் பைல்ஸ் சினிமா பார்க்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு வசதி| Dinamalar

பெங்களூரு-அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சினிமா பார்ப்பதற்கு, கர்நாடக சட்டசபை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.காஷ்மீரில், 1980 – 90 களில் இருந்த சூழ்நிலையை மையமாக கொண்டு வெளிவந்துள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் நாடு முழுதும் திரைக்கு வந்துள்ளது.பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள ஓரியன் மாலின் பி.வி.ஆர்., திரையரங்கில் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் சினிமா பார்த்தனர்.இந்த சினிமாவுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். அனைவரும் கட்டாயம் பார்க்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.இந்நிலையில் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் – திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

புதுடெல்லி, மக்களவையில் இன்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரெயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது”என்றார். 

5 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீச்சி.. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. ஏன்?

மும்பை: கடந்த ஐந்து சந்தை அமர்வுகளுக்கு பிறகு சந்தையானது இன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் மெட்டல், எனர்ஜி, ஐடி துறைகள் பங்குகள் இன்று செல்லிங் பிரஷரில் காணப்படுகின்றது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சென்செக்ஸ், நிஃப்டியின் நிலவரம் என்ன? டாப் கெயினர் பங்குகள் என்னென்ன? டாப் லூசர் பங்குகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம். சீன பில்லியனர்களின் சொத்து மதிப்பு பெரும் சரிவு.. அச்சத்தில் பணக்காரர்கள்.. ஏன் தெரியுமா? முடிவு எப்படி? … Read more

ஆலியா பட் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரன்பீர் கபூரின் அம்மா… வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், இன்று மார்ச் 15-ல் தனது 29வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் பிரம்மாஸ்திரா (Brahmastra) படத்தின் படக்குழுவினர் ஆலியா பட்டின் போஸ்ட்டரையும், அவரின் கதாபாத்திரம் இடம்பெற்ற ஒரு டீசரையும் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பாலிவுட் நடிகையும் ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூர், ஆலியா பட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நீது கபூரின் பதிவு இதற்கு முன்னரே, … Read more