ரஷ்யா படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விரட்டுங்கள்! மக்களை தூண்டிவிடும் உக்ரைன்

 உக்ரைன் தலைநகர் Kyiv-க்குள் ஊடுருவும் ரஷ்யா படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுமாறு பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா படைகளை தலைநகர் kyiv-க்குள் நுழைய விடாமல் உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே, kyiv-வின் Obolon மாவட்டத்திற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளனர். இந்த மாவட்டம் மத்திய kyiv-வில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது. இந்நிலையில், தலைநகருக்குள் ஊடுருவும் ரஷ்ய படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அவர்களை தடுக்குமாறு உக்ரைன பாதுகாப்பு அமைச்சகம் மக்களை … Read more

கெய்னின் பாவத்தை நினைவுபடுத்துகிறது… சகோதர யுத்தத்தை உடனே நிறுத்துங்கள் புடினுக்கு உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி வரும் என்று கொக்கரித்த நாடுகள் இப்போது மௌனம் காத்து வருகின்றன. போரை நிறுத்தக் கோரி இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட நடுநிலை நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழக்கம் போல் பல கட்ட பொருளாதார தடை விதித்து வருகிறது, … Read more

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை- பா.சிவந்தி ஆதித்தன் உள்பட உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த பா.சிவந்தி ஆதித்தன் உள்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2021-22-ம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், செய்தித்துறை அமைச்சர், “தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக … Read more

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கும் ரஷ்ய ராணுவம்..!!

உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 3 மைல் தொலைவில் ரஷ்ய ராணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகரின் அருகே அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: கடந்த 6 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான அரசின் உறுதித்தன்மையை பட்ஜெட்டில் பார்த்துள்ளீர்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போதும், சுதந்திரத்திற்கு பிறகும், நமது பாதுகாப்பு தளவாட உற்பத்தி பலம் பெரியதாக இருந்தது. இரண்டாவது உலக … Read more

உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா.. மற்ற நாடுகள் அஞ்சுவது இதற்காகத் தானோ?

உக்ரைனில் முழு வீச்சில் போரினை தொடுத்து வருகின்றது ரஷ்யா. இரண்டாவது நாளான இன்றும் சற்று சளைக்காத ரஷ்யா படைகள் வேகமாக உக்ரைனுக்கும் முன்னேறி வருகின்றன. குறிப்பாக உக்ரைனின் செர்னோபிள் அணு தளத்தினை ரஷ்ய ராணுவம் கைபற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வரும் உக்ரையில் ஏராளமான உயிரிழப்புகள் நேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல சர்வதேச நாடுகள் ரஷ்யாவினை எச்சரித்தும் பார்த்துவிட்டன. கோரிக்கையும் வைத்து விட்டன. ஆனால் இவை எவற்றையும் ரஷ்யா செவி மடுத்ததாக தெரியவில்லை. … Read more

மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை – பொருள்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி!

மயிலாடுதுறை  முழுவதும் பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை காரணத்தினால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் கொடுக்க முடியாமல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் திணறி வருகிறார்கள். மாதக்கடைசி என்பதாலும், இந்த மாதம் 28 தேதிகள் மட்டுமே என்பதாலும், பொதுமக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களும், பொருள்கள் இருந்தும் அவற்றை பதிவு செய்து விநியோகிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ரேஷன் கடை இதுகுறித்து மயிலாடுதுறை … Read more

உக்ரேனிய சீருடையில் அந்நாட்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறும் ரஷ்யா! சிக்கிய காட்சி

 உக்ரேனிய இராணுவ சீருடையில் அந்நாட்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்யா துருப்புகள், தலைநகர் Kyiv-ஐ நோக்கி முன்னேறி வருவதாக அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது 2வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா படைகள், தலைநகர் kyiv-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் இரண்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவ வீரர்கள், உக்ரேனிய இராணுவ சீருடையில் தலைநகர் kyiv-ஐ நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் … Read more

மத்தியஅரசு அலுவலகங்களில் 30% பணியிடங்கள் காலி: பணியாளர் துறை அலுவலகம் முன்பு மத்திய செயலகம் அதிகாரிகள் தர்ணா…

டெல்லி: மத்தியஅரசு அலுவலகளில் 30 பணியிடங்கள் காலி உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலைமையிலான பாஜக அரசு முன்வராததை கண்டித்து,  மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகத்திற்கு வெளியே மத்திய செயலகம் துறை அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாக மத்திய … Read more

தி.மு.க. தொண்டர் மீது தாக்குதல்: அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க. – அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான புகாரின் … Read more