மருத்துவ மாணவர் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க முடியாது!: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மகன் நாவரசு 1996ல் கொலை செய்யப்பட்டார். மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..!

ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் கடுமையான லாக்டவுன் உலக நாடுகளின் சப்ளை செயின் பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று காலை ஆசிய சந்தையில் உருவான மந்த நிலை வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் நேற்று மத்திய அரசு வெளியிட்ட வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு, மொத்த விலை பணவீக்கம், சமையல் … Read more

Doctor Vikatan: சருமத்தில் சொறி, அரிப்பு, தோல் உரிதல்; சரிசெய்வது எப்படி?

“எனக்குப் பல வருடங்களாக எக்ஸிமா எனும் சரும பாதிப்பு இருக்கிறது. சருமத்தில் சொறிசொறியாக இருக்கிறது. தோல் உரிகிறது. சிகிச்சை எடுத்தும் முற்றிலும் சரியாகவில்லை. இதை முழுமையாக குணப்படுத்த முடியுமா?” – முருகன் (இணையத்திலிருந்து) செல்வி ராஜேந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். “அரிப்புடன் கூடிய தோல் அழற்சியையே எக்ஸிமா என்கிறோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சருமப்பகுதிகள் வீங்கும். அரிக்கும். சிவந்தும் தடித்தும் போகும். பிறகு சொறியாக மாறும். கடைசியாக தோல் உரியத் … Read more

ரஷ்ய ராணுவத்தை தேடித்தேடி வேட்டையாடும் உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்!

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவத்தினர் தேடி தேடி வேட்டையாடும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. உக்ரைன் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பெரும்பாலான முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான … Read more

வைபவ் ‘பபூன்’ பட டீசர்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் ‘பபூன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் – அனகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர்:

தமிழகத்தில் 31 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளியில் தடுப்பூசி போட ஏற்பாடு

சென்னை: இந்தியாவில் பல்வேறு வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 18 வயதை தாண்டிய இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி … Read more

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. விதிமுறைகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

நெதர்லாந்து நிறுவனத்தை மொத்தமாக சுருட்டிய முகேஷ் அம்பானி.. எத்தனை கோடி தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் விலையை உயர்வைப் பயன்படுத்தி அதிக லாபத்தையும், வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காகப் பிரிட்டன் நாட்டிற்குக் கூடுதலான டீசல்-ஐ ஏற்றுமதி செய்வதற்கான பணிகளில் பிசியாக இருந்தாலும், தொடர்ந்து கிரீன் எனர்ஜி துறையைக் கூடுதலான கவனிப்பில் வைத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கிரீன் எனர்ஜி துறையைத் தான் மிகவும் முக்கியமானதாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் அடுத்த 50 வருடத்திற்கு ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை நிர்ணயம் செய்யப்போவது கிரீன் … Read more

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க, நாங்க ரெடி! எங்களை வாங்க வைக்க நீங்க ரெடியா?

ஆட்டோமொபைல் துறையில் இப்போது HDK என்பதுதான் டாக் ஆஃப் தி ஏரியா. இது ஏதோ புது எலெக்ட்ரிக் பைக்கோ, காரோ என்று நினைக்க வேண்டாம். Hosur, Dharmapuri, Krishnagiri – இவற்றின் சுருக்கம்தான் இந்த HDK. எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் சந்தையில் இந்த மூன்றும்தான் இப்போதைக்கு முக்கிய மும்மூர்த்திகள். ஆம், ஓலா முதல் சிம்பிள் எனெர்ஜி, ஏத்தர் எனெர்ஜி, கிரீவ்ஸ் ஆம்பியர், டிவிஎஸ் என்று ஏகப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தொழிற்சாலையை இந்த HDK–யைச் சுற்றி அமைத்துத்தான், தங்கள் எலெக்ட்ரிக் … Read more

கசந்து போன முதல் திருமணம்! இரு முறை திருமணம் செய்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள்… தமிழர் உட்பட

கிரிக்கெட் உலகில் பிரபலமாக உள்ள முன்னணி வீரர் இரண்டு முறை மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். தினேஷ் கார்த்திக் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்த தினேஷ் அடுத்து இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.  முகமது அசாருதீன் இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் நவ்ரீன் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்றவர். நவ்ரீனை 1996ல் விவாகரத்து செய்த அசாருதீன் பாலிவுட் … Read more