போக்குவரத்துத்துறை: பதவி உயர்வுக்காக வசூல்… லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய ரூ.35 லட்சம்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில், நிர்வாக பிரிவு துணை கமிஷனராக நடராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடத்தில் ரகசிய கூட்டம் நடத்தி, கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு அடையவேண்டுமெனில் ரூ. 5 லட்சம் தரவேண்டும் என பேசியதாக தகவல் வெளியானது. இதே போல் மாநிலத்தின் வேறு இடங்களில் பணிபுரியும் போக்குவரத்துத்துறை கண்காணிப்பாளர்களிடத்தில், நீங்கள் அதே இடத்தில் பணிபுரியவேண்டுமெனில், ரூ. 5 லட்சம் தரவேண்டும், இல்லையெனில் உங்களின் இருப்பிடத்திற்கும், பணியிடத்திற்கும் … Read more

திடீர் திருப்பம்! உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யாவிடம் ஆள்பலம் இல்லை… முக்கிய தகவல்

உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்றுவது தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷியா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 19 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது. தலைநகர் கீவ் தான் குறி உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படையினர் நெருங்குவதாகவும், நகரை சுற்றி வளைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கீவ்வை ரஷ்யா கைப்பற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இது குறித்து அமெரிக்க செனட்டரும், செனட் புலனாய்வுக் குழுவின் துணை தலைவருமான … Read more

‘தியாகேசா ஆரூரா’ பக்தர்கள் கோஷத்துடன் ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்….

திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ‘தியாகேசா ஆரூரா’  கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது.  இந்த தேரானது ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில்,   தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலம். சப்தவிடங்க தலங்களில் தலைமையானது திருவாரூர் தியாகராஜர் கோயில். இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,066,777 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,066,777 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 459,251,932 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 392,792,663 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,307 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை பள்ளத்துக்கு பலியான வாலிபர் குடும்பத்திற்கு வீட்டுமனை வழங்க முடிவு| Dinamalar

பெங்களூரு-”சாலைப்பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக, குடிநீர் வாரியம், பெஸ்காம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது,” என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் சாலை பள்ளத்துக்கு, மற்றொருவர் பலியாகியுள்ளார். இதற்கு காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். பெஸ்காம், குடிநீர் வாரியம் உட்பட, சம்பவம் தொடர்பாக, ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளது.நேற்றிரவு (நேற்று முன்தினம்), எம்.எஸ்.பாளையாவின், முனேஸ்வரா லே – அவுட்டில், நடந்த விபத்தில் வாலிபர் பலியானார். … Read more

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவினருக்கு சாகும் வரை ஆயுள் – மகிளா நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் பூவானம் பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வானக்கன்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் அச்சிறுமியின் தாய். அப்போது, சிறுமியின் தயாரின் சகோதரர் முருகேசன்(36) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை மகிளா … Read more

“இனி விளையாட முடியாது”… ஓய்வை அறிவித்தார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்

பிரபல இலங்கை வீரர்  சுரங்கா லக்மல் இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் பெங்களூருவில்பகலிரவு போட்டியாக நடைபெற்ற  2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் … Read more

பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட  ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்

சென்னை எழிலகத்தில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில் சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது..   இங்கு துணை போக்குவரத்து ஆஅணையராக் நடராஜன் என்பவர் பதவியில் உள்ளார்.  நடராஜன் தனது அலுவலகத்தில் பணி புரியும் 30 உதவியாளர்களைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு அளிக்க லஞ்சம் பெற்றதாகத் தகவல் வந்தன. நடராஜன் ஒவ்வொரு உதவியாளரிடம் இருந்தும் ரூ.5 லட்சம் லஞ்சம் … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மேலும் 3 வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: கோவையில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். 2016 முதல் 2021-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு … Read more

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய வீதிகளின் வழியாக  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.