இன்று ரஷ்ய அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை

டில்லி உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.  இதையொட்டி ரஷ்ய ராணுவத்தினர் தரை வழி மற்றும் வான் வழி மூலம் அந்நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   நாடெங்கும் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பெய்து வருகின்றன.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இரு தரப்பு … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.   இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கு கண்டனம் … Read more

ரஷ்ய அதிபர் புதினுடன் இன்றிரவு பிரதமர் மோடி பேசுகிறார்?

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடர்பாக அதிபர் புதினுடன் இன்றிரவு பிரதமர் மோடி பேசுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை – பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.  ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி-யிடம் இருந்து ரூ.18000 கோடி வசூல்..!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை 18000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மீட்டு உள்ளதாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். துஷார் மேத்தா மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான பென்ச் முன்நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டு வழக்குகளின் … Read more

`நாட்டை காக்க தயாராக இருங்கள்… யார் வந்தாலும் ஆயுதம் வழங்கப்படும்!' – உக்ரைன் அதிபர் ட்வீட்

உக்ரைன் மீது ரஷ்யா இன்று காலை முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. `மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள். நாட்டை காப்பதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்’ என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்து வருகிறது. Russia treacherously attacked our state in the morning, as Nazi Germany did in #2WW years. As of today, our countries are on … Read more

விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை உருவாகலாம்: எச்சரிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி

விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர், ரஷ்யா நேட்டோ நாடுகளுக்குள் கால் வைத்தால், நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் போருக்கு அழைக்கப்படலாம் என்று கூறியுள்ளார். நேட்டோவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் Sir Richard Shirreff, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்வதுடன் விடமாட்டார், அவர் அந்த பகுதியிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்றப் பார்ப்பார் என்று கூறியுள்ளார். புடின் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை உருவாக்க விரும்புவதாக … Read more

நேரடியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது : நேட்டோ அமைப்பு அறிவிப்பு

நியூயார்க் நேரடியாக உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ரஷ்ய போர் விமானங்களின் குண்டு வீச்சு தாக்குதலால் விமான நிலையங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டில் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   இதையொட்டி நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், “ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  இது ஐரோப்பியக் கண்டத்தில் … Read more

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்கவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24-2-2022) கடிதம் எழுதியுள்ளார். இன்று (24.2.2022) அதிகாலையில் ரஷிய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் உடனடி கவனத்தை … Read more

உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம்; தமிழக அரசு

சென்னை: உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள தமிழர்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.