வேலூர் மவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை திருப்பத்தூர் காவல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அரசாணை

சென்னை: வேலூர் மவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை திருப்பத்தூர் காவல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புனித் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம்| Dinamalar

மைசூரு, : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, மைசூரு பல்கலைக்கழகம் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் அறிவித்துள்ளது.மைசூரு பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழா, வரும் 22 ல் நடக்கிறது. பல்கலை வேந்தரும், கர்நாடக கவர்னருமான தாவர்சந்த் கெலாட் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவுள்ளார்.இது குறித்து மைசூரு பல்கலை துணை வேந்தர் ஹேமந்த் குமார் நேற்று கூறியதாவது: இந்தாண்டு மொத்தம், 28 ஆயிரத்து 581 இளநிலை பட்டமும், 5,677 முதுகலை பட்டமும் வழங்கப்படும். சில மாணவர்கள் துறை வாரியாக … Read more

வேலைவாய்ப்பின்மை சரிவு.. வர்த்தகப் பற்றாக்குறை உயர்வு.. இந்தியாவின் நிலை இதுதான்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது. முதல் அலையில் இருந்து மீண்டு வந்த போது 2வது அலையில் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டது. 2வது அலை பாதிப்புகளை மெல்ல மெல்லக் கடந்து வரும் வேளையில், ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேளையில் மத்திய அரசு இன்று பல முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை மத்திய அரசின் தேசிய … Read more

கம்யூனிஸ்ட் நிர்வாகி வேலுச்சாமி படுகொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்!

வட்டி தவணைக்காக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கந்துவட்டி கும்பலுக்கு எதிராகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது. வேலுச்சாமி இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2010-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி கந்துவட்டிக்காரருக்கு கட்ட வேண்டிய தவணையை … Read more

உக்ரேனிய அகதிகளுக்கு ஜேர்மனியின் பெர்லின் அரசு எச்சரிக்கை

 உக்ரேனிய அகதிகளுக்கு ஆட்கடத்தல் ஆபத்து குறித்து ஜேர்மனியின் பெர்லின் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, நகரின் பிரதான ரயில் நிலையத்தில் பணம் அல்லது தங்குமிட சலுகைகளை ஏற்க வேண்டாம் என உக்ரைன் அகதிகளை பெர்லின் அரசு எச்சரித்துள்ளது. இதுபோன்ற சலுகைகள் அளிப்பவர்களின் மூலம் உக்ரைன் அகதிகள், கட்டாய விபச்சாரம் அல்லது ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் சிக்கலாம் என்ற கவலையின் காரணமாக அரசாங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அகதிகளின் சூழ்நிலையில் ஆதாயம் தேட விரும்பும் குற்றவாளிகள், பெர்லின் மத்திய நிலையத்தில் … Read more

மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! கொறடா அறிவிப்பு

சென்னை: மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைமையகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறுகிறது என திமுக கொறடா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 18 அன்று காலை10.00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப்பேரவை மண்டபத்தில்  தொடங்க உள்ளதாகவும், அன்றைய தினமே தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்  என்றும் சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி வரும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை … Read more

மார்ச் 18ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர், வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம், நிதி மந்திரி பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  பட்ஜெட் தாக்கல் முடிந்தபிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 18-3-2022 மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார்.  … Read more

சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

சீர்காழி: சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நிவாஸ் ரத்தினம்(30) மற்றும் அவரது மனைவி (28) குழந்தை நிகன்யா (1) ஆகியோர் உயிரிழந்தனர். சமையலறையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் உயிரிழந்தனர்.

ஏர் இந்தியா தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்| Dinamalar

புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. ‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு அரசியல் ரீதியாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இதனால், புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. … Read more

சீனாவுக்கு டேட்டா லீக் செய்த பேடிஎம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை..!

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மார்ச் 11 வெளியிட்ட அறிவிப்பில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இனி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இதோடு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 35ஏ கீழ் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தது. மேலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யின் ஐடி அமைப்பின் விரிவான சிஸ்டம் ஆடிட் நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளது ரிசர்வ் வங்கி. இந்த அதிரடி … Read more