என்னால் எனது பாஸ்போர்ட்டை இழக்க முடியாது… ஜேர்மன் குடியுரிமை விதிகள் மாற்றத்திற்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனியில் தேர்தல் நடக்கும்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மன் குடியுரிமைச் சட்டங்களில் பெரும் மாற்றங்கள் செய்ய இருப்பதாக அறிவித்தது இப்போது ஆட்சி அமைத்துள்ள கூட்டணி. அதுவும், புலம்பெயர்தல், குடியுரிமை முதலான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது. ஆனாலும், குடியுரிமை தொடர்பான நடவடிக்கைகளில் இதுவரை எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை. பல வெளிநாட்டவர்களுக்கு அந்த மாற்றங்கள் சீக்கிரம் நடக்கும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசு பல்வேறு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில், … Read more

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

டெல்லி: உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளுக்காக சென்ற மாணவர்கள், படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு இந்தியா திரும்பி உள்ளனர். இவா்களில் பலா், உக்ரைனில் மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் நாடு திரும்பியதால், அவா்களால் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. … Read more

3வது நாளில் ஆட்டத்தை முடித்தது… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு: இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் இந்தியா முதல் நாளில் இருந்தே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. முதல்  இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை … Read more

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 26-ம் தேதியை பணி நாளாக அறிவித்தார் நெல்லை ஆட்சியர்.

கோப்பை வென்றது இந்தியா; அஷ்வின், பும்ரா அசத்தல்| Dinamalar

பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய அணி 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்தியா வந்த இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 252, இலங்கை … Read more

14 நாள் சிறை.. வீட்டு உணவு அளிக்க NSE சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை.. நீதிபதி அதிரடி..!

இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ மோசடி வழக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இமயமலை சாமியார் முன்னாள் என்எஸ்ஈ தலைமை செயல் அதிகாரியான ஆனந்த சுப்பிரமணியன் தான் எனச் சிபிஐ தெரிவித்த நிலையில், இன்று இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ விசாரணைக்காகச் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது. கடந்த வாரம் இவ்வழக்கை விசாரணை செய்த சிபிஐ கடுமையான கேள்விகளைக் கேட்ட நிலையில் சிபிஐ அமைப்பு மிகவும் மேகமாகவும் நடவடிக்கை எடுத்து … Read more

சித்ரா ராமகிருஷ்ணா: “அவங்களும் கைதி தான்..!" – வீட்டுச் சாப்பாடுக்கு `நோ' சொன்ன நீதிபதி

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தார். அந்த காலகட்டத்தில், பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்றுள்ளன. நிர்வாகம் சார்ந்த மிக முக்கியமான தகவல்களை `இமயமலை யோகி’ என்று சொல்லப்படும் ஒரு நபருக்கு மின்னஞ்சல் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்துவந்துள்ளார். இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. அதற்குப் பின்னர் சித்ரா கைதும் செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறையில் … Read more

3ம் உலகப் போரை தடுக்க எங்களுக்கு உதவி தேவை! உலக நாடுகளிடம் கெஞ்சிய உக்ரைன்

ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் தங்களுக்கு கூடுதல் உதவி அளிக்குமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் தங்களுக்கு கூடுதல் உதவி அளிக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, 3ம் உலகப் … Read more

விமான பயணத்தின்போது சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்! மத்தியஅரசு

டெல்லி: சீக்கியர்கள் விமானங்களில் கத்தி, கிர்பான் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பாதகத்திற்கு பயன்படுத்த உதவும் சிறு உபகரணங்களையும் விமானத்தில் எடுத்துச் செல்ல மார்ச் 4ந்தேதி தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சீக்கியர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவை முன்னணி சீக்கிய அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC) விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக மார்ச் … Read more

உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் புழல் முன்னாள் ஒன்றிய செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமான புழல் நாராயணன்- கவிதா நாராயணன் மகன் எம்.என்.அஜய் தென்னவன்- ஆர்.பாரதி திருமணம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- புழல் நாராயணனை பொறுத்த வரையில் அவர் ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார். எல்லாமே தளபதிதான் என்று. எனக்கு எல்லாமே இந்த கழகம்தான். இந்த … Read more