காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை- கார்த்தி சிதம்பரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரையில் நடைபெற்ற கட்சி  நிர்வாகி இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லாததால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.  சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குழந்தைகள் கௌசிக் (3), 8 மாத குழந்தை பவதாரணி ஆகியோரை கொன்று தாய் பாரதி (21) தற்கொலை செய்துகொண்டார்.

என் தொகுதிக்கு வர அனுமதி கேட்கணுமா? மாஜி முதல்வர் குமாரசாமி காட்டம்| Dinamalar

ராம்நகர், : ”அலிபாபா 40 திருடர்கள் போன்று பரவியுள்ளனர். என் தொகுதிக்கு வர அனுமதி பெற வேண்டுமா,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வியெழுப்பினார்.ராம்நகரில் அவர் நேற்று கூறியதாவது:அலிபாபா 40 திருடர்கள் போன்று, தொகுதியில் பரவியுள்ளனர். மக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதால், அவர்களின் பாதுகாப்புக்காக நான் தொகுதிக்கு வந்துள்ளேன். நாங்கள் யாருடைய சொத்துகளையும் கொள்ளையடிக்க வரவில்லை. யார், யாரின் நிலத்தை யோகேஸ்வர், எழுதி வாங்கியுள்ளார் என்பது தெரியும். பொய்யான ஆவணங்களை உருவாக்கி, நிலத்தை எழுதி வாங்கியுள்ளார். … Read more

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை அளித்த மாநிலம்..!!

போபால்,  விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.  நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.  இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி … Read more

எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிதி பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பனை செய்து ஐபிஓ வெளியிட்டு அதன் மூலம் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யலாம் எனத் திட்டமிட்டது. இதற்காக மார்ச் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசு எல்ஐசி ஐபிஓ வெயிட வேண்டும் என்பதற்காக அனைத்து பணிகளையும் வேக வேகமாகச் செய்த நிலையில் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த … Read more

நாக்பூர்: குடும்பத்தில் அடிக்கடி சண்டை; மனைவி, மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமான நாக்பூர் ராஜீவ் நகரில் வசித்து வந்தவர் விலாஸ் காவ்டே(51). இவரின் மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இது தவிர ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். விலாஸ் காவ்டேயிக்கு வேலை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் விரக்தி அடைந்த விலாஸ் இரவு மனைவியும், மகளும் உறங்கிய பிறகு தலையணையால் முகத்தை மூடி இருவரையும் கழுத்தை … Read more

கனடாவில் உணவகத்துக்குச் சென்றவரின் கையைப் பிடித்து இழுத்த பெண்: அடுத்து காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி

கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. வான்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை பார்க் செய்துவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற ஒரு காரில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுள்ளார். Changqing தனக்கு ஆங்கிலம் தெரியாது என மாண்டரின் மொழியில் கூற, அந்த பெண் தொடர்ந்து ஏதேதோ கேட்டுள்ளார். உடனே அந்த காருக்கு அருகில் … Read more

சீன நிறுவனங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்ததற்காக பே டிஎம் நிறுவனம் மீது நடவடிக்கை…

பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், பே டிஎம் நிறுவனம் தனது பயனர்களின் தரவுகளை சீன நிறுவனங்களுடன் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆர்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த விவரம் தெரிய வந்ததை அடுத்தே பே டிஎம் நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீன நிறுவனத்தின் மறைமுக முதலீட்டை பெற்றுள்ள … Read more

ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் தீபா, தீபக் எதிர் மனுதாரராக சேர்ப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2008 2009-ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2008 -ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் … Read more

குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில் ஜோஷியாரா உடல்நலக் குறைவால் காலமானார்..!!

குஜராத்: குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில் ஜோஷியாரா உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ. அனில் ஜோஷியாரா உயிரிழந்தார்.