உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்!!

ஜெனீவா : உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என்றும் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டத்தில் குட்டரஸ் தெரிவித்துள்ளார்.  

காஷ்மீரில் அமையுது சாரதா கோவில்| Dinamalar

சென்னை : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோவிலுக்கு செல்ல முடியாததால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், புதிய சாரதா கோவில் கட்டப்பட உள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் நதிக் கரையில், அன்னை சாரதாம்பாள் கோவில் உள்ளது. ‘சாரதா பீடம்’ என அழைக்கப்படும் இக்கோவில், 51 சக்தி பீடங்களில் ஒன்று.மிகப் பழமையான இக்கோவில் வளாகத்தில், மிகப்பெரிய வேத பாடசாலை இருந்தது. ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற … Read more

டாடா-வுக்கு மத்திய அரசு எதிர்ப்பு.. இல்கர் ஆய்சி நியமனத்தில் பிரச்சனை.. பிளான் பி தேவை..!

இந்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 69 வருடத்திற்குப் பின்பு மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றிய நிலையில், ஆரம்பம் முதல் பல மாற்றங்களை அதிரடியாகச் செய்து வந்தது. குறிப்பாக ஏர் இந்தியாவில் நீண்ட காலமாக முக்கியப் பிரச்சனையாக இருந்த வாடிக்கையாளர் சேவை, உணவு தரம், ஆன் டைம் விமானச் சேவை போன்றவற்றை மேம்படுத்தப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிப் பல வாரங்களாகப் புதிய சிஇஓ பெயரை அறிவிக்கக் காலதாமதம் ஆன … Read more

கரூர்: ரூ.9 லட்சம் செக் மோசடி வழக்கு; குளித்தலை திமுக எல்.எல்.ஏ-வுக்கு பிடிவாரன்ட்! -நடந்தது என்ன?

குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மீது, பெண் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், கரூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குளித்தலை கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், இரா.மாணிக்கம். இவர், இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்தநிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம், கடந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

டி20 போட்டியில் இலங்கையுடன் மோதும் இந்திய அணி – இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு  நிலையில் கேஎல் ராகுல், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் … Read more

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது

மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.  இவர் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.   இவரிடம் இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்யச் சம்மன் அனுப்பினர். இதையொட்டி இன்று காலை 6 … Read more

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கும் முயற்சியில் அவசரமாக தலையிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாகப்பட்டினம், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் 17.2.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில், கோடியக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தூரத்தில் தங்களுடைய பைபர் படகில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடி சாதனங்கள், எரிபொருள் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். … Read more

பிப்-24: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெங்களூரில் வனம் உருவாக்க பி.எம்.ஆர்.சி.எல்., விருப்பம்| Dinamalar

பெங்களூரு-ஜப்பானின், ‘மியாவாகி’ எனப்படும் அடர்வன காட்டை உருவாக்க பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.ஒரு காலத்தில், ‘பூங்கா நகர்’ என பெயர் பெற்ற பெங்களூரு நகர், தற்போது காங்கிரீட் காடாக மாறியுள்ளது. பசுமையை காண முடியவில்லை. இழந்த பசுமையை மீண்டும் கொண்டு வர, மாநகராட்சியும் பல நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கிடையில், நகரை பசுமையாக்குவதில், தன் பங்களிப்பை அளிக்க பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது. தனக்கு சொந்தமான, அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு, வனம் … Read more

கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வு.. 2000 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டது. தேசியக் கொடி குறித்துக் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதை எதிர்த்துக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா -வை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டத்தில் இறங்கிய நிலையில், 5வது நாளாகச் சட்டப்பேரவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் விவாதம் செய்யாமலேயே இரு முக்கிய மசோதாக்கள் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுக் கூட்டம் நிறைவடைந்தது. 7வது சம்பள கமிஷன்: … Read more