உக்ரைன் போரால் சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள அச்சம்: சில பொருட்களுக்கு தட்டுப்பாடு

உக்ரைன் போர் உருவாக்கியுள்ள அச்சம் காரணமாக, சுவிட்சர்லாந்தில் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சுவிஸ் பார்மசிக்களில் காண முடிகிறது. ஆம், சுவிஸ் பார்மசிக்களிலிருந்து தூக்க மாத்திரைகளையும், அமைதிப்படுத்த உதவும் tranquilizerகளையும், அயோடின் மாத்திரைகளையும் மக்கள் பெருமளவில் வாங்கி வருவதால் அவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக பார்மசி ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். அயோடின், அணுக்கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். ஆக, உக்ரைனில் அணுக்கதிர் உலையில் விபத்து ஏதாவது ஏற்படலாம், அல்லது, … Read more

ஏழை மக்களின் வயிற்றில் அடித்து, கார்ப்பரேட்களை வாழ வைக்கும் மோடி அரசு – ஆடியோ

ஏழை மக்களின் வயிற்றில் அடித்து, கார்ப்பரேட்களை வாழ வைக்கும் மோடி அரசை 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஓவியர் பாரியின் கார்ட்டூன் வலியுறுத்தி உள்ளது.  ஆடியோ

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

புதுடெல்லி: சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதற்கிடையே, முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.  உத்தர பிரதேசத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை மற்றும் பாஜக அரசு பதவியேற்பு குறித்து பிரதமர், … Read more

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது தேனி மாவட்ட வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இனி யாருடைய உதவியும் தேவையில்லை.. சீனாவின் புதிய நிலக்கரி உற்பத்தி திட்டம்..!

இந்தியாவைப் போலவே சீனாவும், கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு அதிகப்படியாக வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கிறது. இதனால் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் தனது நாணய மதிப்பைக் குறைக்கும், அன்னிய செலாவணியை அதிகப்படியாக நிலக்கரிக்கு இழந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுவது மட்டும் அல்லாமல் தனது உற்பத்தி துறையை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகச் சீனா அரசு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..! … Read more

“மத்திய திட்டங்களை தன் திட்டங்களாக அறிவிக்கும் ஸ்டாலின்” – `அறிவிப்பு ஆட்சி’ எனச் சாடிய அண்ணாமலை

“தமிழ்நாட்டில் நடப்பது வெறும் அறிவிப்பு ஆட்சி” என ஆளும் தி.மு.க அரசை சாடியுள்ளார் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாகத் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கும் முன்பே மாணவர்களை அங்கிருந்து வெளியேற மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. உக்ரைன் போர் தொடங்கிய போது ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருந்தனர். எனவே, மாணவர்களைப் பத்திரமாக மீட்க மத்திய பாஜக அரசு ‘ஆபரேஷன் கங்கா’ எனும் திட்டத்தைத் … Read more

புதினுக்கு இவ்வளவு நோய்களா.! போருக்கு இதுவே காரணம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர் மற்றும் அவரின் கடுமையான கோபத்திற்கு அவர் எடுத்துக்கொள்ளும் புற்றுநோய்க்கான ஸ்டீராய்டு சிகிச்சை முறைகளால் ஏற்பட்டுள்ள மனநல பாதிப்புகளே முக்கிய காரணம் என மேற்கு நாடுகளை சேர்ந்த உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பல்வேறு நெருக்கடி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை விளாடிமிர் புதின் தொடர்ந்து நடத்தி வருவதற்கு அவருக்கு ஏற்பட்டுள்ள மனநோய்யே காரணம் என அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் … Read more

தலைமைமீது விமர்சனம்: தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கம்… 

சென்னை: காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கம் செய்யப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களே காங்கிரஸ் கட்சியின் தலைமை, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமான ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் … Read more

மு.க.ஸ்டாலின் உண்மையான ஜனநாயகப்படி நடக்கிறார்- சரத்குமார் பேட்டி

நாகர்கோவில்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து அங்கு போர் காரணமாக தமிழகம் திரும்பிய மருத்துவ … Read more

கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்: ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறைமுக தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.