பார்லி., பட்ஜெட் இரண்டாம் கூட்டம் துவக்கம்| Dinamalar

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.,31ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்கியது. பிப்.,1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்.,11ல் முடிந்தது. மூன்று வார இடைவெளிக்குப் பின், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் இன்று துவங்கியது. இதில், மத்திய பட்ஜெட் தொடர்பான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் ராஜ்யசபாவும், மாலையில் லோக்சபாவும் இயங்கின. தற்போது, வைரஸ் … Read more

"வானதி ஊரில்தான் இருக்கிறாரா?" – பணிகளை பட்டியலிட்டு கோவை எம்.பி மீண்டும் கேள்வி

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘கோவையை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்.’ என்று கூறப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு “அறியாமையா.. அக்கறையின்மையா?” – வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி இதுகுறித்து கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, வானதி சீனிவாசனும் அதற்கு … Read more

விவகாரமாகும் விஜயின் மஞ்சப்பை!

‘பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. ஆகவே அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மேலும் குறைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை “மஞ்சள் பை இயக்கம்” என்ற பெயரில் ஆரம்பித்தார். கடந்த 2021 டிசம்பர் … Read more

தேக்கடியில் பராமரிப்பு பணிகள் செய்ய இடையூறு: கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகியவையும் அங்கே உள்ளன. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான சிமெண்ட் தகடுகள், சின்டெக்ஸ் தொட்டி, பிளாஸ்டிக் குழாய்கள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றபோது, தேக்கடி … Read more

சங்கரன்கோவில் அருகே இயக்குநர் கௌதமன் கைது: 144 தடை உத்தரவை மீறி வந்ததால் போலீசார் நடவடிக்கை

தென்காசி: சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாங்குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கௌதமன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கௌதமன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். கௌதமன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.  

சாலைகளில் அபாய பைக் சாகசம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய சிபாரிசு| Dinamalar

மங்களூரு : வாகனங்கள் இயங்கும் பரபரப்பான சாலையில் பைக்கில் சாகசம் செய்து, ஹீரோக்களாக முயற்சித்த ஏழு இளைஞர்களை, மங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டுனர் உரிமம் கிடைக்காமல் செய்யும்படி, ஆர்.டி.ஓ.,வுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.தட்சிண கன்னடா மங்களூரு நகரில் சில இளைஞர்கள் வாகனங்கள் இயங்கும் பரபரப்பான சாலைகளில், வீலிங் செய்வது, சாகசங்கள் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்திருந்தனர். இவர்களின் உயிருக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் தொந்தரவு கொடுத்துள்ளனர்.’வாட்ஸ் ஆப்’ குரூப்பில், அபாயகரமான … Read more

தடுமாறும் சென்செக்ஸ்.. தாறுமாறாக உயரும் இன்போசிஸ் பங்குகள்..!

மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் ஏற்பட்ட சரிவைச் சமாளித்து உயர்வுடன் துவங்கியுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கம், நாணய மதிப்பைச் சரி செய்ய வட்டி உயர்வை முக்கியமான கருவியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த வாரம் பல நாடுகளில் மத்திய வங்கி நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் அதிகப்படியான தடுமாற்றத்துடன் துவங்கினாலும் … Read more

மேற்கு வங்கத்தில் 2 கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை! – ஒரே நாளில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களால் அதிர்ச்சி

மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து இரண்டு கவுன்சிலர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அனுபம் தத்தா(48). இரண்டு முறை பன்னிஹாட்டி பகுதியின் கவுன்சிலராக இருந்துள்ளார். தனது செல்லப்பிரணிக்கு மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இரு மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தாக கூறப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட அனுபம் தத்தா அதைத் தொடர்ந்து அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார் அனுபம் … Read more

பள்ளி மாணவர்களுக்கு தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் கைது

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில், ஆரணி அருகே விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசைநகர் பகுதியில் அரசு நிதிஉதவி பெறும் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே உள்ள விடுதியில் 113 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று விடுதியில் … Read more

நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்ட அமர்வு  கடந்த மாதம் (பிப்ரவரி) 11ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து, இன்று இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் … Read more