அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.!

கீவ்: உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை இன்று காணொளி வாயிலாக காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த சீனா

சீனாவில் 2020 காலகட்டத்தில் காணப்பட்ட அதே அளவு கொரோனா தொற்று எண்ணிக்கை எட்டியுள்ள நிலையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று மட்டும் 1,938 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய நாள் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு என தெரிய வந்துள்ளது. ஷென்சென் தெற்கு வணிக மையம் மூடப்பட்டுள்ளது, ஷாங்காய்க்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் பேருந்து … Read more

மார்ச்-14: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சொத்தை தன் பெயருக்கு மாற்றி| Dinamalar

தார்வாட் : சொத்தை தன் பெயருக்கு மாற்றி கொடுக்காததால் கணவரை கொலை செய்த மனைவியையும், இரு மகள்களையும் போலீசார் கைது செய்தனர்.தார்வாட் அருகே உள்ள மரேவாடா கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா, 45. இவரது மனைவி ஷோபா.இவர், தார்வாட் தாலுகா பா.ஜ., மகளிரணி பிரமுகராக உள்ளார். கணவனிடம் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளார்.இதற்கு கணவர் மறுத்துள்ளார். நேற்று முன்தினமும், வழக்கம் போல சொத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி மனைவி தகராறு செய்துள்ளார்.அப்போதும் மறுத்ததால், … Read more

உக்ரைன் போரில் உதவுங்கள்: சீனாவிடம் கெஞ்சிய ரஷ்யா

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை நாடியுள்ளது ரஷ்யா. உக்ரைன் போர் தொடர்பில் சீனாவின் உதவியை ரஷ்யா நாடியுள்ள தகவல் முக்கிய பத்திரிகைகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கள்கிழமை ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,065,620 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.65 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,065,620 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 458,150,914 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 391,399,195 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,481 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாவணகரேவில் லோக் அதாலத் ஒரே நாளில் ஒன்றிணைந்த 10 தம்பதியர்| Dinamalar

தாவணகரே : தாவணகரேவில் நடந்த லோக் அதாலத்தில், விவாகரத்துக்கு விண்ணப்பித்த வழக்குகளில் ஒரே நாளில் பத்து தம்பதியர் ஒன்றிணைந்தனர்.தாவணகரே மாவட்ட சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நீதிபதி ராஜேஸ்வரி தலைமையில் லோக் அதாலத் நடந்தது.ஒரே நாளில், 15 ஆயிரத்து 918 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 7,362 வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டன. பொருளாதாரம், குடும்ப நலன், குற்றவியல் உட்பட அனைத்து நீதிமன்ற வழக்குகளும் அடங்கும்.இதில், சமாதான பேச்சு நடத்தி 30 குற்ற வழக்குகளும்; 65 காசோலை பவுன்ஸ் வழக்குகளில் … Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது

பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம்  31ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் … Read more