உக்ரைனில் வெடிக்கும் வன்முறை: ராணுவ அதிகாரி ஒருவர் பலி, ஆறு பேர் படுகாயம்

உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் இறந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கடந்த 24 நேரத்தில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில், உக்ரைன் … Read more

உத்தரப்பிரதேச 4வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து  அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் … Read more

இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள்- பிரதமர் மோடி

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்

விருதுநகர்: சிவகாசி அருகே ஜமீன் சல்வார்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..!

எலான் மஸ்க், உலகை புரட்டிப்போடும் பல தொழில்நுட்பத்தையும், நிறுவனத்தையும் உருவாக்கி வாழும் ஐன்ஸ்டீன் என்றும் பலரால் பாராட்டப்படும் நிலையில், அவருடைய பர்சனல் வாழ்க்கை ஆரம்பம் முதல் மோசமானதாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில், 3 வருடமாக க்ரைம்ஸ் உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் 2021ல் க்ரைம்ஸ்-ஐ பிரேக்அப் செய்த 50 வயதான எலான் மஸ்க் தற்போது 27 வயதான நடாஷா பாசெட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார். … Read more

Chennai Book Fair: "வடசென்னைக்கும் மதுரைக்கும் ஒரே நிறம்" – எழுத்தாளர் பாக்கியம் சங்கர்!

‘வடசென்னை இன்னும் விரிவாக இலக்கியத்தில் பதியப்பட்ட வேண்டும்’ எனச் சொல்லும் எழுத்தாளர் பாக்கியம் சங்கர், அறியப்படாத சென்னையின் பக்கங்களையும் அதன் எளிய மனிதர்களின் கதையையும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். அவரிடம் புத்தகக் காட்சி குறித்து உரையாடினோம். “புத்தகக் கண்காட்சிக்கும் உங்களுக்குமான உறவு பற்றி…” “எனக்கும் புத்தகக் கண்காட்சிக்குமான உறவு குறைந்தது 20 வருடங்கள் இருக்கும். அப்போதெல்லாம் புத்தகம் வாங்க காசு இருக்குமா எனத் தெரியாது. அங்க போனால் நிறைய சீனியர் எழுத்தாளர்களை பார்க்க முடியும் என மட்டும் … Read more

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கைகள் துவக்கம்

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுவது தொடர்பான பிரச்சினைக்கு எதிராக பிரித்தானியா அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியது. அதன்படி, பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க ரஷ்யர்கள் பலர் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் மீது 2018ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா தடைகள் விதித்துவிட்ட நிலையில், அவர்கள் கவனம், பிரித்தானியா மீது திரும்பியது. ரஷ்யாவிலிருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்கள் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்பட்டன. மிகப்பெரிய பணக்கார ரஷ்யர்களுக்கு பிடித்த … Read more

மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல்: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை.

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது. இதையடுத்து,. மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் குறித்து  திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்பட பல மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே சிறையில் உள்ளார். சென்னை ராயபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் உள்பட 110 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருந்து ஜாமினில் விடுவிக்கக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் இன்று காலை மீண்டும் கைது … Read more

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்ப்பு.: காவல்துறை

சென்னை: திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமனறத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.