தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100 க்கு கீழ் குறைந்தது…

சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 6,50,06,472 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கொரோனாவால் இன்று மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை, இதுவரை மொத்தம் 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 223 பேர் குணம் அடைந்துள்ளனர் மேலும் 1,173 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்றைய பாதிப்பு 35 … Read more

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று … Read more

எப்போதெல்லாம் தாம்பத்தியத்திற்கு `நோ' சொல்லவேண்டும்? – காமத்துக்கு மரியாதை – S2 E11

“விருப்பமிருந்தால் வாழ்நாளின் இறுதிவரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். ஏன் மாதவிலக்கு நாள்களில், கர்ப்ப காலத்தில்கூட தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பல கட்டுரைகளிலும் காணொளிகளிலும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதே நேரம், எப்போது செக்ஸ் கூடாது; யாருடன் செக்ஸ் கூடாது; எந்தச் சூழ்நிலைகளில் செக்ஸ் கூடாது என்பது பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்” என்ற பாலியல் மருத்துவர் காமராஜ், அவை பற்றி விளக்க ஆரம்பித்தார். பாலியல் மருத்துவர் காமராஜ் இதுவே பாதுகாப்பு! ஒரு பார்ட்னருடன் மட்டும் … Read more

உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்கா பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், கீவ் புறநகரில் உள்ள இர்பின் நகரில் Brent Renaud என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கீவ் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. Brent Renaud, ரஷ்ய வீரர்களால் குறிவைக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கீவ் … Read more

தலைமை உத்தரவை மதிக்காத நிர்வாகிகள் – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம்பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் முறைகேடான முறையில் கூட்டணி கட்சிகளின் இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர்கள், உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய … Read more

303 ரன்களில் டிக்ளேர்… இலங்கையின் வெற்றிக்கு 447 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

பெங்களூரு: இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி,  9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக … Read more

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பால் சென்சின் நகரில் முழு ஊரடங்கு: சீன அரசு அறிவிப்பு

சீனா: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்சின் நகரில் சீன அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஏற்கனவே சாங்சன் நகரில் 2 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு என சீன அரசு அறிவித்துள்ளது.

இந்தியா குறித்த உண்மை புத்தகம் வெளியிட ஆர்.எஸ்.எஸ்., முடிவு| Dinamalar

ஆமதாபாத்;வெளிநாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் இந்தியா குறித்து தவறான புரிதலை பரப்பும் முயற்சியை முறியடிப்பதற்காக, ஆய்வாளர்கள், எழுத்தாளர்களுடன் இணைந்து, உண்மை தகவல்களின் அடிப்படையில், இந்தியா குறித்த விரிவான புத்தகத்தை தயாரித்து வெளியிட, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும், அகில பாரதிய பிரதிநிதி சபா உறுப்பினர்களின் உயர்நிலைக் கூட்டம், குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது.வரும் 2025ல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் உட்பட, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., … Read more

பிக்சட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. கொஞ்சம் இதையும் படித்திட்டு போங்க?

இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரிக்காவிட்டாலும், சமீப வாரங்களாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் முன்னனி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் தனது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதம் எவ்வளவு அதிகரித்துள்ளது. இதனால் எந்த வகையான வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும்? என்று முதல் இந்த வட்டி அதிகரிப்பானது அமலுக்கு … Read more

“காங்கிரஸூடன் இடதுசாரிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது!" – கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே புதியதாக கட்டப்பட்ட பாரதி கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய இரு கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய  இரண்டையும் திறந்து துவக்கி வைத்துப் பேசினார். கே.எஸ்.அழகிரி அப்போது, “ஜனநாயகத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு இயக்கத்தினுடைய போக்கை மாற்றி விட முடியாது. 100 ஆண்டுகள் … Read more