ஒரு ஓட்டுக்கூட பெற விடாமல் அதிமுக-வை தோற்கடித்த சுயேச்சை! -வென்றதும் அதே கட்சியில் இணைந்த சுவாரஸ்யம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராம்ஷா, சுயேச்சையாக பிரதிவிராஜா மற்றும் இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில், சுயேச்சையாகக் களமிறங்கிய பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். 149 வாக்குகள் வாங்கிய திமுக பரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்குப் பதிவான … Read more

சுவிட்சர்லாந்து செல்ல வேண்டுமா? தற்போதையை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள்

சுவிட்சர்லாந்திற்கு வருபவர்கள் கடுமையான நுழைவு விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் மொத்தம் 2,653,056 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 12,553 பேர் இறந்துள்ளனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், சுவிட்சர்லாந்தில் உள்ள அதிகாரிகள் பிப்ரவரி 17 அன்று வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட பெரும்பாலான கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கினர். பிப்ரவரி 17 முதல் பயண விதிகள் தளர்த்தப்படும் என்று சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் வெளியிட்ட … Read more

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய நாட்டுக்குச் சென்றுள்ளார்.  அவர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.  இம்ரான் கானிடம் ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளார்.   அப்போது அவரிடம் இந்தியாவுடனான உறவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இம்ரான் கான், “எங்களுக்கு இந்தியா … Read more

உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்

டோக்கியோ: உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக அதிபர் புதின் நேற்று அறிவித்தார். அங்கு ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்டதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், … Read more

பிப்-23: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஒரு ஓட்டு கூட பெறாத ச.ம.க., வேட்பாளர்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 25 வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் போட்டியிட்டார். அந்த வார்டில் இவருக்கு ஓட்டு இல்லை. தேர்தலில் சதீஷ்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.மேலும் 3 வது வார்டில் அ.ம.மு.க. மாயகிருஷ்ணன், 11 வது வார்டில் பா.ஜ., செந்தில்குமார் ஆகியோர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர். … Read more

அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் போட்ட தடை.. ரஷ்யாவுக்கு செக்.. புடின் அடுத்த திட்டம் என்ன?!

ரஷ்யா செவ்வாய் அதிகாலையில் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அதிகாரப்பூர்வமாகச் சுதந்திரம் அளித்துத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டார் அதிபர் விளாடிமிர் புடின். இதன் மூலம் ரஷ்யா போர் செய்யாமலேயே உக்ரைன் எல்லைக்குள் நுழைந்துள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா நிதியியல் தடை விதித்துள்ள நிலையில், தற்போது பிரிட்டனும் அமெரிக்காவுடன் கைகோர்த்துத் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது. ரஷ்யா கைப்பற்றிய 2 … Read more

உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவின் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஜேர்மனி தடை!

உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப விளாடிமிர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் முக்கிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு மாகாணகளான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். அதையடுத்து, அந்த இரண்டு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் மேலும் அதிகரித்தது. இந்த நடவடிக்கையை ஒரு பரந்த … Read more

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

சென்னை திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மேலும் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என … Read more

பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்

கொச்சி: விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் … Read more