ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராகவும், வருங்கால பிரதமராகவும் வரவேண்டும் – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

புதுடெல்லி: ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே. ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும். வருங்கால பிரதமராகவும் வரவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான் … Read more

பா.சிவந்தி ஆதித்தனாரின் கனவை நனவாக்க சாதி, மத பேதமின்றி செயல்பட வேண்டும்- பா.ஆதவன் ஆதித்தன் பேச்சு

தாம்வரம் வரதராஜபுரம் தெட்சணமாற நாடார் சங்க மஹால் திறப்புவிழாவில் தந்தி தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- எனது அண்ணன் சிவந்தி ஆதித்தனார், அப்பா சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் இருவரும் இந்த விழாவுக்கு வருவதற்கு மிகவும் விருப்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சார்பில் நான் இங்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தினத்தந்தி குடும்பத்தில் இருந்து இங்கு வந்திருப்பதை நான் முக்கியமாக கருதுகிறேன். ரொம்ப … Read more

கீல்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

ஈரோடு: கூடக்கரை கீல்பவானி வாய்க்காலில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீல்பவானி வாய்க்காலில் குளித்தபோது திருப்பூரை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!

தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஓட்டுமொத்த நோக்கில் அதிகரித்தே காணப்படுகிறது. இது அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இது பணவீக்கமானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, தங்கத்தின் தேவையானது மோசமான சரிவினைக் கண்டிருந்தது. … Read more

`சரத்பவாருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பிருக்கிறது' – மத்திய அமைச்சர் மகன்கள் மீது வழக்கு பதிவு!

மகாராஷ்டிராவில் மாநில அமைச்சர் நவாப் மாலிக் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் சகோதரியுடன் சொத்து பரிவர்த்தனை தொடர்பு வைத்துக்கொண்டதாகக் கூறி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.க, நவாப் மாலிக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், சரத்பவாருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகன்கள் நிலேஷ், நிதேஷ் ரானே ஆகியோர் மீது … Read more

பிரான்சில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு: 4-வது டோஸ் தடுப்பூசி அறிவிப்பு

பிரான்சில் நாளை முதல் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், 4-வது டோஸ் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது பூஸ்டர் டோஸ் பெற்ற 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது டோஸை பிரான்ஸ் வழங்குகிறது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார். பிரான்சில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது, இருப்பினும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படுவதாக காஸ்டெக்ஸ் கூறினார். பிரான்சில் மார்ச் 14, திங்கட்கிழமை முதல் தடுப்பூசி பாஸ் (Vaccine Pass) கைவிடப்படுகிறது. இது … Read more

திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

சென்னை: திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கம்போல் ஒன்றுசேராமல் தனித்தனியே போட்டியிட்டதன் விளைவாகவும், மத வெறுப்பு அரசியலை தொடர்ந்து பரப்பி வருவதாலும் பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அவர்கள் பேசவில்லை. மாறாக ஜெய் ஸ்ரீ ராம் என்ற … Read more

உ.பி வெற்றிக்கு பிறகு பாஜக கொடுத்த பரிசு அட்டை- பி.எப் வட்டி குறைப்பை கிண்டல் செய்த மம்தா

2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையா விமர்சித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கங்களின் … Read more

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைனில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசியதில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.