கோவைக்கு மோடி அரசு ஏதாவது செய்துள்ளதா? கோவை எம்.பி. கேள்வி

கோவை: கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி., நடராஜன் சவால் விடுத்துள்ள சவாலில், கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தை செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதரவற்ற சிறுமிகளை குறி வைத்து காதல் வலைவீசும் வாலிபர்கள்

தகவல் தொடர்புகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில் செல்போன்கள் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை. குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்த கூடாது. இதன் மூலம் அவர்களது நினைவு திறன் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில் கொரோனா வந்தது. இதனால் குழந்தைகளின் உலகமே செல்போன் என்கிற தவிர்க்க முடியாதாகவே மாறிப்போனது. வீட்டில் இருந்த செல்போன்களை எப்போதாவது குழந்தைகளிடம் விளையாடுவதற்கு கொடுத்து வந்த பெற்றோர் முழு நேரமும் செல்போனை அவர்களிடமே கொடுக்க வேண்டிய கட்டாயத்தை கொரோனா வைரஸ் … Read more

உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மிக மோசனமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் தூதரகத்தை மாற்ற வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு இடமாற்றம்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக, போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதாலும், மேற்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடப்பதாலும், அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் காலங்களில், ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு … Read more

அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

புதுடெல்லி, வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கு-வடகிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.1 … Read more

சரமாரி கத்திக்குத்து… பெட்ரோல் ஊற்றி எரிப்பு – பள்ளி மாணவி தந்தையை திட்டம் தீட்டிக் கொன்ற இளைஞர்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (45). இவர் வேடசந்தூரில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் மகள் பள்ளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒட்டன்சத்திரம் தாலுகா சின்னகுளிப்பட்டியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் ஒராண்டாக பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் தந்தைக்கு தெரிய வந்ததை … Read more

வாந்தி வருவதாக பள்ளிக்கூட வகுப்பறையில் வெளியேறி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி!

தமிழகத்தில் பள்ளி கூடத்துக்கு உள்ளேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் – சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான அர்ச்சனா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். உயிரை மாய்த்து கொண்டார் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்த மாணவி, பிற்பகலில் திடீரென வாந்தி வருவதாக கூறிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியேறியிருக்கிறார். வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு.. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய விஷ்யங்கள் தொடபான காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட … Read more

புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை- 2 பேராசிரியர்கள் மீது வழக்கு

புளியங்குடி: தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாடத்தி. இவர்களது மகள் இந்து பிரியா (வயது18). இவர் புளியங்குடியில் மனோ கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணேசன் இறந்து விட்டதால் மாடத்தி பீடி சுற்றி மகளை வளர்த்து வந்தாள். இந்நிலையில் நேற்று இந்து பிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்து பிரியா தூக்குபோட்டு கொண்ட அறையில் … Read more

தமிழகத்தின் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.