லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை 20 சதவீத சிறுநீரக திறனுடன் மட்டுமே இயங்கி வருகிறது – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!

ராஞ்சி, 73 வயதான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்(ராஷ்டிரிய ஜனதா தளம்)  5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15-ந் தேதி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை 20 சதவீத சிறுநீரக திறனுடன் மட்டுமே இயங்கி … Read more

7வது சம்பள கமிஷன்: மீண்டும் DA உயர்வு.. விரைவில் அறிவிப்பு வெளியாகும்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்ட சலுகை வழங்கியது மட்டும் அல்லாமல், ரத்து செய்யப்பட்ட காலத்திற்கு நஷ்ட ஈடாகவும் DA அளவீட்டைப் பெரிய அளவில் அதிகரித்தது இந்நிலையில் மத்திய அரசு, மீண்டும் அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி … Read more

“வரலாறு காணாத வெற்றி… தமிழக மக்களின் அன்பை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்போம்!" – அண்ணாமலை ட்வீட்

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமலே இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதியன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே பரபரப்பாகத் தொடங்கி, மாலையில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. ஸ்டாலின் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க பெரிய அளவில் நகராட்சி, … Read more

மனித உயிர்களுடன் விளையாடவேண்டாம்… ரஷ்யாவுக்கு எச்சரிக்கை

ரஷ்யா மனித உயிர்களுடன் விளையாடுவதாக குற்றம் சாட்டியுள்ளது ஜேர்மனி. ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்யா, உக்ரைனில் வாழும் பொதுமக்களின் உயிர்களுடன் பொறுப்பற்ற முறையில் விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், உடனடியாக அது பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், தான் அவசரமாக ரஷ்ய அரசுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, மனித உயிர்களுடன் விளையாடாதீர்கள் என்று கூறியுள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் … Read more

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 61,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,22,749 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் இருவர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,989 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,375 பேர் குணம் … Read more

பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி- அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. தனித்து நின்ற பா.ஜனதாவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் 22 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த … Read more

மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம்: டிடிவி. தினகரன் பேட்டி

சென்னை: மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம் என அமமுக பொதுச்ச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக  வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்த மக்களுக்கு டிடிவி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் பலி

சிம்லா, இமாச்சலபிரதேச மாநிலம் உன்னா மாவட்டத்தின் பதூ என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அந்த பட்டாசு ஆலையில் 15-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆலையில் தொழிலாளார்கள் இன்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் … Read more

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை. வாருங்கள் பார்க்கலாம். நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு ஜிஆர்எம் ஓவர்சீஸ் (GRM Overseas). இந்த பங்கானது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3455% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்கின் விலையானது பிப்ரவரி 21,2019 அன்று 14.99 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 … Read more