அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியைத் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்

கமுதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிமுக மகளிர் அணி தலைவியைத் தோற்கடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியான வழிவிட்டாள் என்பவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மகாலட்சுமி ராஜசேகர் 159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி ராஜசேகர் ”இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையைத் … Read more

ஷிவமொகாவில் 144 தடை உத்தரவு, பள்ளிகள் விடுமுறை நீட்டிப்பு

கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா நேற்று முன்தினம் இரவு வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையொட்டி அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. எனினும், ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு … Read more

நெல்லை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

நெல்லை: நெல்லை மாநகராட்சி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, களக்காடு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளை திமுக கைப்பற்றிஉள்ளது. 17 பேரூராட்சிகளில் மொத்தமாக உள்ள 273 வார்டுகளில் 152 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா பாதித்த 363 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரி : மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1062 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோ தனையில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1,65,619 ஆக உயர்ந்து, பாதிப்பு சதவீதம் 2.07 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 19 பேரும், வீட்டு தனிமையில் 344 பேர் என மொத்தம் 4363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,63,296 … Read more

மணிப்பூர்; அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துள்ளது – பிரதமர் மோடி

இம்பால், மணிப்பூர் மாநிலம் ஹீங்காங்கில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த மாதம் மணிப்பூர் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த பல ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பல அரசாங்கங்களை கண்டுள்ளது. பல வருடங்கள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, மணிப்பூரில் சமத்துவமின்மை மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், பாஜகவின் இரட்டை இயந்திர அரசு, மணிப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி உழைத்தது. பாஜகவின் நல்லாட்சியையும், நல்ல … Read more

ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன?

நாட்டில் கொரோனாவின் தாக்கம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அழைப்பு விடுத்து வருகின்றன. குறிப்பாக ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் மார்ச் மாதத்தில் இருந்து அழைப்பு விடுக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ரூ.400 கோடிக்கு வீடு, 3 விமானம், ஏகப்பட்ட கார்.. ராஜ வாழ்க்கை வாழும் கௌதம் அதானி..! இதற்கிடையில் சமீப நாட்களாக பல செய்திகள் ஊழியர்களை மீண்டும் … Read more

"பிடித்த காமெடி நடிகரின் குடும்பத்துக்கு விஜய் கொடுத்த ஒரு லட்ச ரூபாய்!"- நெகிழும் `காக்கா' கோபால்

காமெடி நடிகராக நமக்குத் தெரிந்தவர் காக்கா கோபால். மிருகங்களுடன் உரையாடுவது அவரின் தனித்திறன். ஆடு, மாடு, கோழி, காகம் என அனைத்து உயிரினங்களிடமும் அத்தனை இயல்பாய் உரையாடி அசர வைக்கிறார். இயக்குநராக வேண்டும் என எண்ணி நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து.. ‘காக்கா’ கோபால் “இப்ப மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். தொடர்ந்து, நல்ல நல்ல சீரியல்கள் வந்துட்டு இருக்கு. இத்தனை வருட இடைவெளியை சீக்கிரமே … Read more

அதிமுக, நாம் தமிழர் கட்சிக்கு ஷாக் கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்! கவனம் ஈர்த்த பெண் வேட்பாளர்

சென்னையில் உள்ள முக்கிய வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் இரண்டாவது இடம் பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை வார்டு 136ல் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர்பெற்ற வாக்குகள் 7,222ஆகும். கடும் போட்டியாக பார்க்கப்பட்ட அதிமுக லஷ்மி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் … Read more

திமுக வசமானது காஞ்சிபுரம்: மாவட்டத்தின் 3 பேரூராட்சிகளிலும் திமுக அமோகம்…

காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்  ஆகிய 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வசப்படுத்திஉள்ளது. தமிழ்நாடு முழுவதும பிப்ரவரி 19ந்தேதி தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி,  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  மையங்களில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜாபாத், … Read more

ஒரு வாக்கு கூட வாங்காத அ.தி.மு.க. வேட்பாளர்

புதுக்கோட்டை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளர் முகம்மது இப்ராம்சா  ஒரு வாக்குகள்  கூட பெறவில்லை. இந்த வார்டில் … Read more