மார்ச்-13: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தமிழக நகை வியாபாரியிடம்| Dinamalar

மாத நாயக்கனஹள்ளி : தமிழகத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.தமிழகத்தை சேர்ந்தவர் ஜோசப். நகை வியாபாரி. இவரிடமிருந்து மஹாராஷ்டிராவை சேர்ந்த வியாபாரி, இரண்டே கால் கிலோ தங்கத்தை வாங்கி இருந்தார். இதற்காக அவர், ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்பணத்தை தார்வாடின் ஹுப்பள்ளிக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி ஜோசப்பிடம் கூறியிருந்தார்.இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஹுப்பள்ளிக்கு காரில் சென்ற அவர், வியாபாரியிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை வாங்கினார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,061,473 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,061,473 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 456,289,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 389,980,246 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,955 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெப்போலியனுக்கும் ஹிட்லருக்கும் ஏற்பட்ட நிலை புடினுக்கும்: புதிய சவாலை சந்திக்கும் ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது இரண்டு வாரங்கள் கடந்தும் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய துருப்புகளை புதிய சவால் ஒன்று திணறடித்து வருகிறது. இன்னும் 3 வாரங்கள் வரையில் இதே நிலை நீடிக்கும் என்பதால், ரஷ்ய ஜனாதிபதி புடின் சுதாரித்துக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து 17 நாட்கள் கடந்துள்ளது. ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டபடியே தலைநகர் கீவ்வை கைப்பற்ற முன்னேறி வருகின்றனர். தற்போது தலைநகரில் இருந்து 15 மைல்கள் தொலைவில் ரஷ்ய துருப்புகள் … Read more

உங்க தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா? சில அசத்தலான குறிப்புகள்

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான்.   இப்போது, ​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை நிச்சயமாகக் காண முடியும்.ஆனால் அவை அனைத்தும் தற்காலிக தீர்வாகவே இருக்கும்.  அந்தவகையில் தற்போது தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். காய்ந்த … Read more

பி.எப்., வட்டி குறைப்பு 44 ஆண்டில் மிக குறைவு| Dinamalar

புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 44 ஆண்டுகளில் இது மிகவும் குறைவாகும்.நாடு முழுதும் அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு, மாத சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டு தோறும் வட்டி வழங்கப்படும். நாடு முழுதும் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர், பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர். ஓய்வுக்குப் பின் கிடைக்கக் கூடிய இந்த தொகையே, நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நடத்துவதற்கு பெரிய … Read more

ரஷ்ய துருப்புகளிடம் தனியாக சிக்கிய உக்ரைன் குடும்பம்: பதறவைக்கும் சம்பவம்

உக்ரைன் தலைநகர் கீவ் எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றப்படும் நிலையில், பெண் மற்றும் அவரது பிள்ளைகள் உட்பட 7 பேர் தனியாக அவர்களிடம் சிக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் கடுமையாக போராடி வருகின்றனர். நகரின் இரு பக்கத்தில் இருந்தும் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளின் கைகளில் கீவ் நகரம் சிக்கலாம் என்ற நிலையில், பெண்கள் சிறார்கள் என மக்கள் உயிருக்கு அஞ்சி … Read more

ஹிந்துக்களை பிரிக்க சதி ஆர்.எஸ்.எஸ்., குற்றச்சாட்டு| Dinamalar

ஆமதாபாத்-‘அரசியல் சட்டம் மற்றும் மத சுதந்திரம் என்ற போர்வையில், நாட்டில் மதவெறி அதிகரித்து வருகிறது. மேலும், ஹிந்துக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியும் நடக்கிறது’ என, ஆர்.எஸ்.எஸ்., கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக் குழுவின் மூன்று நாள் கூட்டம், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடக்கிறது. கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில், பிரிவினை சக்திகளின் சவால்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் சட்டம், மதசுதந்திரம் என்ற பெயரில் மதவெறி அதிகரித்து … Read more

சாமுண்டீஸ்வரி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்| Dinamalar

மைசூரு:மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில், ஜெ., தோழி சசிகலா சுவாமி தரிசனம் செய்து, நேர்த்தி கடனை செலுத்தினார். பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜராக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி இருவரும், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் பெங்களூரு வந்தனர். நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்ததும், மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில், அவர்கள் நேற்று காலை மைசூரிலிருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை … Read more