பழநி: பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குப் பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. கொடி இதனைத் தொடர்ந்து அருள்மிகு வள்ளி,தெய்வானை சமேத் முத்துக்குமாரசாமிக்கும் மற்றும் கொடி மரத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு ,வெள்ளி தேரோட்டமும் மார்ச் 17-ம் … Read more

இதுவரை கொல்லப்பட்ட உக்ரேனிய துருப்புகள் எண்ணிக்கை: ஜெலென்ஸ்கி வெளிப்படை

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரேனிய இராணுவ தரப்பில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதன்முறையாக வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய துருப்புகளின் தாக்குதல் 17வது நாளாக தொடர்கிறது. தலைநகர் கீவ் மீது கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது ரஷ்ய துருப்பு. இந்த நிலையில், கீவ் நகரை தரைமட்டமாக சிதைத்தால் மட்டுமே உங்களால் கைப்பற்ற முடியும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய துருப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த 17 நாட்களில் ரஷ்ய துருப்புகளை எதிர்த்து போரிட்ட … Read more

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம்! ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாராஷ்டிரா போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்றார். மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், வன அலுவலகள் 3நாள் மாநாடு முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைசர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,  அரசு அறிவித்த பல திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். இன்று நிறைவு நாள் மாநாட்டில் … Read more

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சி திமுக ஆட்சி -முதல்வர் ஸ்டாலின்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெறும் 30-வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- கரிகாலன் விருது வழங்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு வாக்குறுதி தந்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அது நடக்காமல் போய்விட்டது.  இப்போது மீண்டும் ஆட்சிமாற்றம் வந்திருக்கிறது. எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்று … Read more

முடிந்தது தேர்தல், அதிரடியை ஆரம்பிக்கிறதா அரசு? 43 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்ட PF வட்டி!

நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. உ.பி உள்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதமாக இருந்துவந்தது. வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. … Read more

ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றி சவுதி அதிரடி

 சவுதி அரேபியாவில் இன்று ஒரேநாளில் கொலைக் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 81 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது உட்பட பல்வேறு குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் அறிவித்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் அல்-கொய்தா, ஐ.எஸ் குழு மற்றும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞரை … Read more

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும் , சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய  மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடங்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் … Read more

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

துபாய்: சவுதி அரேபியாவில் கொலை வழக்கு, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் மரண தண்டனை பெற்ற 81 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஏமனைச் சேர்ந்த 7 பேர், சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். 1979 ஆம் ஆண்டு மக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 63 போராளிகளுக்கு ஜனவரி 1980-ல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையின் எண்ணிக்கையை விட இன்று அதிக நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் … Read more

காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி விலகல் என தகவல்

டெல்லி: காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. 5 மாநில தேர்தல் தோல்வியை அடுத்து நாளை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுவில் விலகல் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மடுகரை பள்ளியில் மகளிர் தின விழா| Dinamalar

நெட்டப்பாக்கம் : மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். மகளிர் தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் துணை சபாநாயகர் ராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியைகளுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கினார். முன்னதாக ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியை கவுரி நன்றி கூறினார். நெட்டப்பாக்கம் : மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில் மகளிர் … Read more