இளம் தலைமுறையை மேம்படுத்தினால் இந்தியாவின் எதிர்காலம் மேம்பாடு அடையும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி,  மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து  இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:- நமது இளம் தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம் தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும். 2022 யூனியன் பட்ஜெட்டில் கல்வித்துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  *முதலாவதாக, தரமான … Read more

மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. ஐடி ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறைகள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில், ஐடி துறையும் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி துறையில் 4.5 லட்சம் ஊழியர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 20 வருடங்களில் இல்லாத மோசமான நிலை.. ஆனா ஐடி துறையினருக்கு ஜாக்பாட் தான்..! வொர்க் பரம் ஹோம் … Read more

"அணியில் இனி என்றைக்கும் இடமில்லை என்றார்கள்"- சாஹாவின் குற்றச்சாட்டும், டிராவிட்டின் பதிலும்!

இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சமீபத்தில் அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கபட்டுள்ள நிலையில், இத்தொடரில் பல்வேறு சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரித்திமான் சாஹா | Wriddhiman Saha தொடர் ஃபார்ம் அவுட் காரணமாக இடம்பெறாத அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா தங்கள் பழைய ஃபார்மை மீட்க தற்போது ரஞ்சி தொடரில் அவரவர் அணிகளுக்காக ஆடிவருகிறார்கள். இஷாந்த் ஷர்மா அணியில் … Read more

வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிப் (41). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த … Read more

சென்னையில் காப்பீட்டுத் தொழிலாளர் தேசிய மாநாடு- மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்தார்

சென்னை: எல்.ஐ.சி. நிறுவனத்தில் இயங்கிவரும் காப்பீட்டுத் தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் (NOIW) பதினெட்டாவது அகில இந்திய மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த இரண்டு  தின மாநாட்டை, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினரான ஶ்ரீ ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தை சேர்ந்த சுவாமி சத்யபிரபானந்தா உரையாற்றினார். இந்த … Read more

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொளி ஆலோசனைக்கு பிறகு மாநில தேர்தல் ஆணையார் ஆணையிட்டுள்ளார்.

கடற்படை அணிவகுப்பு; ஜனாதிபதி பார்வை| Dinamalar

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.,21) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார். இந்த அணிவகுப்பில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் … Read more

உ.பி: ருசிகரம்; மாறி மாறி காலில் விழுந்து மரியாதை – இணையத்தில் வைரலாகும் வீடியோ

உன்னவ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி உ.பி-யில் பேரணிக்கு வந்தபோது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமருக்கு ராமர் சிலையை வழங்கினர். பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, ​​பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் … Read more

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. தங்கம் விலை சரிய இதுதான் காரணம்..!

சர்வதேச முதலீட்டுச் சந்தைக்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வந்த ரஷ்யா உக்ரைன் பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ரஷ்யா – ஜெர்மனி உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் 2வது கட்டமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக இருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை அமெரிக்க அதிபரான ஜோ … Read more