நிர்வாகியின் காலில் விழுந்த இந்திய பிரதமர் மோடி: காட்டு தீயாய் பரவும் வீடியோ காட்சி

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் காலில் விழுந்த பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தி, அவரின் காலை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலுக்காக உன்னாவ் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாஜகவின் உத்தரப்பிரதேச தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய … Read more

அனில் அம்பானியின் மகன் திருமணம்… மும்பையில் கோலாகலமாக நடந்தது….

அம்பானி சகோதரர்களில் இளயவரான அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானியின் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. க்ரிஷா ஷா என்பவருடன் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த திருமணம் நேற்று நடைபெற்றது. ஒருவார காலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சுப்ரியா சூலே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். க்ரிஷா ஷா-வின் தாயார் நீலம் ஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார், இவரது தந்தை நிக்கஞ் ஷா கடந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடை பெறவில்லை – தமிழக பாஜக புகார்

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியம் ஆகியவற்றை  தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய போலீஸ் படை பாதுகாப்பு வழங்க கோரி திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மற்ற தாலுகா அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

தரமான கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: மோடி| Dinamalar

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இணைய கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று துவக்க உரையாற்றினார். அவரின் உரை: நம் நாட்டின் இளம் தலைமுறைதான் வருங்காலத் தலைவர்கள். ஆகையால், இளம் தலைமுறையினரை மேம்படுத்துவது … Read more

62 வயதான மூதாட்டியின் துணிச்சலான மலையேற்ற சாகசம்!

பெங்களூர், பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி நாகரத்னம்மா மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் மலையேற்றம் செய்துள்ளார்.  விஷ்ணு என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில்,  பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான நாகரத்னம்மா என்ற வயதான மூதாட்டி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகஸ்திய கூடம் எனப்படும் சிகரத்தின் உச்சியில் சேலை அணிந்தபடி ஒரு கயிற்றின் உதவியுடன் சிகரத்தில் ஏறுகிறார்.  சக்யாத்ரி மலைத்தொடரில் உள்ள உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்று அகஸ்திய கூடம் … Read more

சீன செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மை..!

இந்தியா – சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பும் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் இயங்கி வரும் சீன மொபைல் செயலிகளைத் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாக அடுத்தடுத்துத் தடை செய்து வருகிறது. இந்தத் தடை உத்தரவால் இந்தியாவுக்கும், இந்திய மொபைல் செயலி நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளும், நன்மைகளும் உருவாகியுள்ளது. இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..! சீன செயலிகள் தடை 2020ஆம் ஆண்டிலேயே 100க்கும் அதிகமாக மொபைல் செயலிகள் பல கட்டங்களாகத் … Read more

“அதிமுக-வோ  அடையாளம்; சினிமாவிலோ அதிகாரம்”- `அசுர வளர்ச்சி' அன்புச் செழியன்!

அ.தி.மு.க வில் மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர்கள் முதல் இந்நாள் முதல்வர் வரை வருகை தருகிறார்கள். கோலிவுட்டின் உச்ச நடிகர்களும் விருந்தினர்களாக இந்தத் திருமணத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செல்வாக்குடன் நடந்த திருமணம் சினமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம். சுஷ்மிதா- சரண் திருமணத்திற்கு வந்த திரைத்துறையினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதைவிட மணமகளின் அப்பாவான அன்புசெழியனிடம் தங்கள் வருகையை உறுதிசெய்வதில் தான் குறியாக இருந்தனர். திரைத்துறைக்குள் தனி சாம்ராஜ்யத்தை அன்புசெழியன் கட்டமைத்திருப்பது … Read more

பிரித்தானியாவை நெருங்கும் மூன்றாவது புயல்: மக்களுக்கு நூற்றுக்கணக்கான எச்சரிக்கைகள்

பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் புதன்கிழமை துவக்கி Dudley என்னும் புயல் பிரித்தானியாவைப் புரட்டி எடுத்த நிலையில், அதன் தாக்கம் அடங்குவதற்குள், வெள்ளிக்கிழமை Eunice புயல் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. அதன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் சுமார் 155,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், Franklin என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று … Read more

மெரினாவில் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளைக் காணவந்த மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த வருடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்டவர்களின் பெருமையைப் போற்றும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப் பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. மேலும், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளையும் நிராகரித்தது, அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more