வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு

சென்னை: வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக தொண்டர் மீது ஜெயக்குமார் முன்னிலையில் தாக்குதல் நடந்தது.

இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!

முதலீட்டு சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் தினசரி அதிர்ச்சி கொடுக்கும் விஷயமாக மாறியுள்ளது என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு, ஒருபக்கம் மத்திய அரசு அனைத்து அரசு அமைப்புகளும் இந்த வழக்கில் ஈடுப்பட அனுமதி அளித்துள்ள நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் சோதனை செய்து, தற்போது ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளையும் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வெறும் ஈமெயில் மூலம் கட்டுப்படுத்த தனக்குச் சாதகமான விஷயங்களைச் செய்துகொண்ட இமயமலை – சென்னை சாமியார் யார் … Read more

ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்!

ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். மேகபதி கவுதம் ரெட்டிக்கு திடீரென நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திர அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி துபாயில் இருந்து அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மேகபதி … Read more

“சர்கார்: செல்வமணி போர்ஜரி”!: கே.பாக்யராஜ் ஆவேசம்

வரும் 27ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. எதிர்த்தரப்பில் ஆர்.கே.செல்வமணி தரப்பினர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், “விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் கதை பிரச்சினைக்கு உள்ளானது. அந்தக் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜேந்தர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். … Read more

அன்று 3 பேர்… இன்று 2 பேர்… இரண்டாவது முறையாக வாக்களித்தவர் வேதனை

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்த ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த எழிலரசன் என்பவர் கூறுகையில், கடந்த 19-ந்தேதி சனிக்கிழமையும் நான் வாக்களித்தேன். இன்று இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்களிக்க வந்துள்ளேன். அன்று எங்கள் குடும்பத்தில் 3 பேர் வாக்களித்தோம். பணி காரணமாக எனது மகன் வெளியூருக்கு சென்று விட்டார். எனவே இன்று இரண்டு வாக்குகள் மட்டுமே … Read more

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 57,400 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 57,400 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 17,117 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 19,968 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரம் பேராக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,38,524 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 37,901 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,21,24,284 ஆனது. தற்போது … Read more

மீண்டும் பணிநீக்கம்.. ஆட்டம் கண்ட அஸ்திவாரம்.. பெட்டர்.காம் விஷால் கர்க் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் பல நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தாலும் இன்று முதல் மிகப்பெரிய பேசு பொருளாக இருப்பது அமெரிக்காவில் இருக்கும் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனத்தின் 900 பேரின் பணிநீக்கம் தான். ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?! பெட்டர்.காம் பெட்டர்.காம் நிறுவனத்தின் சிஇஓ விஷால் … Read more

Ind vs WI: பூரனுக்கு மூன்றாவது அரைசதம், இந்தியாவிற்கு மூன்றாவது வெற்றி!

மூன்றாவது டி20 போட்டியையும் வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை வழி அனுப்பியிருக்கிறது இந்திய அணி. முந்தைய போட்டிக்கும் இப்போட்டிக்கும் அவ்வளவு வித்தியாசம் ஏதுமில்லை. மிடில் ஓவர்களில் குறைந்த ரன் ரேட்டினை சென்ற ஆட்டத்தில் பன்ட்டும் வெங்கடேஷும் சரி செய்ததுபோல இம்முறை சூர்யகுமாரும் வெங்கடேஷும் சரி செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகளின் தொடக்க பேட்டர்கள் வழக்கம்போல சொதப்ப இப்போட்டியிலும் அரைசதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் பூரன். இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது … Read more

சிறு வயதில் இருந்து திருமண ஆசை! 66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம்… மன்மதனாக வலம் வந்த முதியவர்

இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின். 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் … Read more