இன்றைய ராசி பலன் | 11/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more

ரஷ்யா உக்கிரம்… கொத்தாக புதைக்கப்படும் உக்ரேனிய மக்களின் சடலங்கள்: நெஞ்சை உலுக்கும் காட்சி

ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களை கொத்தாக புதைக்கும் கோர காட்சிகள் புகைப்படமாக வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கியுள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தினர். அரை மில்லியன் மக்கள் குடியிருந்து வந்த மரியுபோல் நகரில், ரஷ்ய துருப்புகள் முற்றுகையிட்ட ஒருவாரத்தில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில், சவக்கிடங்குகள் … Read more

பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்கதக்க நிகழ்வு – கமல்ஹாசன்

சென்னை: பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்கதக்க நிகழ்வு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேரறிவாளன் ஜாமீன் வரவேற்கத்தக்க நிகழ்வு. தாமதப்படுத்தப்பட்டாலும், நீதி கிடைத்திருப்பதில் ஆறுதல் அடைய இடமுண்டு. நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்பதற்கான ஆதாரம் இந்த ஜாமீன் அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி கொண்டாட்டத்திற்கு தடையில்லை| Dinamalar

புதுடில்லி:ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது. கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு, அசாம், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல்கள் நடந்ததால், அப்போது தேர்தல் கமிஷன் பல கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப் பட்டது.இந்த கட்டுப்பாடுகளுடன், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் … Read more

ஜேர்மனியில் முதல் முறையாக 250,000 கடந்த தினசரி கோவிட்-19 பாதிப்பு!

ஜேர்மனியில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) இன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 262,752 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு அந்த எண்ணிக்கை 210,673-ஆக இருந்தது. பல ஜேர்மன் சோதனை வசதிகள் வரையறுக்கப்பட்ட திறனுடன் இயங்குவதால் வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். நேற்று (மார்ச் 9) 259 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக ஜேர்மனியின் தொற்று நோய்களுக்கான … Read more

உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று … Read more

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கம்

சென்னை: பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடரின் போது முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் 20% வரை ஒதுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ட மேற்படிப்பு மைய கட்டடம் ரூ.65 லட்சத்தில் புனரமைப்பு பணி| Dinamalar

புதுச்சேரி-காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய கட்டடம் 65 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிறுவன இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார்.அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு ரூ.65 லட்சம் செலவில் கல்லுாரியின் பிரதான கட்டடத்தை புதுப்பிக்கும் பணி, ரூ.10 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் கலந்து கொண்டனர். … Read more

BJP வெற்றி பெற்ற ரகசியம்! – ShareChat-ல் Saran-cibi

2024-ம் ஆண்டு நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு டிரைலராகப் பார்க்கப்பட்டதுதான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள். உ.பி-யில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறுமா? கோவா & மணிப்பூரில் இந்தமுறையாவது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு திடீரென இவ்வளவு வளர்ச்சி வந்தது எப்படி? உத்தரகாண்டில் முந்துவது யார்? -போன்ற பல்வேறு கேள்விகளுக்குமான விடை இன்று தெரிந்துவிட்டது. 5 state election results இந்த முடிவுகளின் தரவுகள் அடிப்படையில் ‘The Imperfect Show’ டீமை … Read more

2022ம் ஆண்டுக்கான புதிய கிரிக்கெட் விதிகள் அறிமுகம்: மன்கட்டிங் முறைக்கு இனி அனுமதி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளுக்கு மெரில்போன் கிரிக்கெட் கிளப் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை, கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகளை உருவாகும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் துணை குழு ஒன்று கூடி 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி, இனி மன்கட்டிங் முறையில் எதிரணி வீரரை ஆட்டமிழக்க செய்வது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் … Read more