கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக

ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முன்னணி நிலவரப்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்டில், பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி, மீண்டும் அமைக்கிறது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.  மதியம் 1 மணி நிலவரப்படி கோவாவில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகித்தது. திரிணாமுல் 4 இடங்களிலும் மற்றவர்கள் 6 … Read more

தாம்பரம் மற்றும் திருவள்ளுவர் பகுதிகளில் 17 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ 15.55 இலட்சம் வசூல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சென்னை/தெற்கு-ஐஐ மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தாம்பரம் மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.1,09,000/-  செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவா, உத்தரகாண்ட் , மணிப்பூரில் கடும் இழுபறி- முன்னிலை நிலவரம்

டேராடூன், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், கோவா மாநிலங்களில்  பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 201தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 71 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.  பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 76 இடங்களிலும்,  காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 8 … Read more

உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி துறைக்கு சாதகம் தான்.. எப்படி.. ஏன்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது இனியும் நீடிக்குமா? அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திற்கு இடையில், ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து பல டெக் நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட்சாப், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், இனி ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்களை போடாது என அறிவித்துள்ளது. எனினும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன. ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் – ரஷ்யா மோதல் தான் காரணம்..! ரஷ்யாவில் … Read more

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காரணம் யோகி ஆட்சியா… மோடி அலையா?

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்த தொகுதிகளான 403-ல், 312 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. அப்போது முதல்வர் வேட்பாளராக யாரையும் பா.ஜ.க முன்னிறுத்தவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாகவே அந்த வெற்றியை பா.ஜ.க பெற்றது. யோகி அந்த வெற்றிக்குப் பிறகுதான், கொரக்பூர் தொகுதி நாடாமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வர் நாற்காலியில் பா.ஜ.க … Read more

தொப்பை முதல் புற்றுநோய் வரையுள்ள நோய்களை குணமாக்க வேண்டுமா? வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க

பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகமும் ஒன்று. இந்த இரண்டு விதைகளையும் சரியான அளவில், சரியான வழியில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை அளிக்கும். அந்தவகையில் வெந்தையத்தை கருஞ்சீரகத்துடன் சேர்த்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து, அந்நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது குடித்து வர … Read more

திமுக எம்.பி. மகன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுக எம்.பி. மகன் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நினைத்துப் பார்க்கவே உள்ளம் அஞ்சி நடுங்குகிறது என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே  தடுப்புச் சுவரில் கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதையடுத்து,  திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவிற்கு திமுகவினர் உள்பட … Read more

சென்னை மாநகராட்சியின் புதிய பட்ஜெட் ரூ.5 ஆயிரம் கோடியில் தயாராகிறது

சென்னை: சென்னை மாநகராட்சி க்கு புதிய மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர். 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதன் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வாகி சென்னை மாநகரத்தின் வளர்ச்சி பணிகளை செய்வதற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 5 வருடமாக சிறப்பு அதிகாரி பட்ஜெட் தயாரித்து வழங்கினார். இந்த வருடம் புதிய மேயர் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் … Read more

5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடையை நீக்கியது தேர்தல் ஆணையம்

டெல்லி: 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. 5 மாநிலங்களில் 4-ல் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.