இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா மூன்றாம் அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே பதிவாகிறது.   கடந்த 24 மணி நேரத்தில்  இந்தியாவில் ஒரே நாளில் 4,575 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இது நேற்றைய பாதிப்பான 3,993 ஐ விட சற்று அதிகரித்துள்ளது.    ஒருநாள் கொரோனா நேற்று 3,993 ஆக இருந்த நிலையில் இன்று 4,575 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,71,308 லிருந்து 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது. … Read more

1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,350 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடன் சமாதான பேச்சுக்கு தயார். நேட்டோவுடன் இணைய உக்ரைன் முயற்சி செய்யாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா இடையே சமாதானம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக … Read more

`மத்திய அரசின் உபரி நிலங்களை பணமாக்க 5 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்!' – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத கட்டடங்களைப் பணமாக்குவது தொடர்பாக ஓர் அமைப்பை உருவாக்குவது குறித்த முக்கிய முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு, `தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி)’ என்றழைக்கப்டுகிறது. இதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்களான … Read more

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கிலிருந்து  தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், கடந்த 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், இதுவரை … Read more

உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை….

டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம்  கடந்த ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி  வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 5 பேர் விடுதலைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்- திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தண்டனைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.  அதேவேளையில்,  சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக மிகச் சிறப்பான முறையில் வாதாடி குற்றவாளிகளுக்குத் தண்டனை … Read more

மதிமுகவின் 28-வது பொதுக்குழு மார்ச் 23-ம் தேதி நடைபெறும்: வைகோ

சென்னை: மதிமுகவின் 28-வது பொதுக்குழு மார்ச் 23-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் பொதுக்குழு கூடுகிறது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு – மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-போர்ச்சுக்கல் இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின்படி தனக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க முடியாது என தெரிவித்து அபு சலீம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், அபு சலீமுக்கு தூக்கு தண்டனையோ, 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறை … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கி உயர் அதிகாரி கைது.. ரூ.400 கோடி கடன் மோசடியில் தொடர்பு..!

காசியாபாத்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெட்டர் நொய்டா கிளையின் தலைமை மேலாளர், முதன்மை குற்றவாளியான லக்ஷய் தன்வாருடன் இணைந்து 400 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுப்பட்டதாக காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். கடன் மோசடி குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கிரேட்டர் நொய்டாவில் உள்ள வங்கியின் மேலாளர் உட்கர்ஷ் குமாரை கைது செய்துள்ளதாக, அந்நகர காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக குமார் பஞ்சாப் வங்கியில் சந்திரா நகர் கிளையில் … Read more