காமெடி நடிகர்; `மது’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! -இனி பஞ்சாப் முதல்வர்… யாரிந்த பக்வந்த் மான்?

வாக்கெடுப்பு மூலம் தேர்வு: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை சற்று வித்தியாசமான முறையில் தேர்வு செய்தது. பொதுமக்களிடம் மொபைல் நம்பரை கொடுத்து அதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மான் என்பவரை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். பஞ்சாப்: மக்களிடம் கருத்து… ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்! – அறிவித்தார் கெஜ்ரிவால் “வாக்கெடுப்பு நடத்தாமலேயே … Read more

உக்ரைன் அரசு கவிழ்க்கப்படுமா? அதிகாரபூர்வ தகவலை தெரிவித்த ரஷ்யா

உக்ரைன் அரசை கவிழ்க்கும் நோக்கத்திற்காக அந்நாட்டின் மீது போர் தொடுக்கவில்லை என ரஷ்யா மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகாரோவா கூறுகையில், உக்ரைன் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும். உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ … Read more

4மாநிலங்களில் பாஜக முன்னிலை: காலை 11 மணி அளவிலான முன்னணி நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் தேசிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றுகிறது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11மணி நிலவரப்படி,  403 … Read more

பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கு சறுக்கல்- மாநில தலைவர் சித்து பின்னடைவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த கட்சியின் 13 வேட்பாளர்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு.:முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் 2வது நாளாக 1200 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இன்றோடு இரண்டாவது நாளாக இந்திய சந்தையில் பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது. இன்று இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதனையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். 1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,350 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி! சர்வதேச சந்தைகள் இதற்கிடையில் பல்வேறு சர்வதேச … Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார்..!" – இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த நாங்கள் தயார்” என கூறியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் இது தொடர்பாகப் பேசிய சுஷில் சந்திரா, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரைதான். … Read more

பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் புதைபட… உக்ரைனில் ரஷ்யாவின் கோரமுகம்

உக்ரைனில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று ரஷ்ய வான் தாக்குதலில் சிக்க, 17 பெண்கள் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட குறித்த வான் தாக்குதலில் தரைமட்டமான மருத்துவமனையின் இடிபாடுகளில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருதரப்பும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையிலேயே, ரஷ்யா அத்துமீறி இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட ஜெலென்ஸ்கி, இதுவரை 17 பெண்கள் … Read more

5மாநில சட்டமன்ற தேர்தல்: காலை 10மணி – வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. உ.பி.யில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில் முன்னணியில் தொடர்கிறது. பஞ்பாபில் காங்கிரஸ் கட்சி மீண்டும் … Read more