உலக முக்கிய பணக்காரர்களின் ஒரு நிமிட வருமானம் எவ்வளவு தெரியுமா? எலன் மஸ்க் முதல் அம்பானி வரை

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், உலக பணக்காரர்களின் ஆண்டு வருமானம் பற்றியும் அல்லது ஒருநாள் வருமானம் பற்றியும் அறிந்து கொள்ள எப்போவுமே ஆர்வம் உண்டு. இந்த பணக்கார நிறுவனங்கள் பலகோடி மனிதர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத நிலையில், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு கூட தங்கள் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் எவ்வளவு, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று தெரிவது இல்லை என்பது நிதர்ச்சனமான உண்மை. அந்த வகையில் இந்த … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. மதியம் … Read more

தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியீடு

சென்னை: தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 43.65% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19, 968 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 48,867 பேர் குணமடைந்துள்ளனர். 673 பேர் உயிரிழந்தனர். இதுவரை கோவிட்டில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,20,86,383 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,11,903 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது, 2,24,187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தினமும் கோவிட் உறுதியாகும் விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 175 கோடியே ,37, … Read more

பஞ்சாப் தேர்தல் ருசிகரம், உடல் ஒன்று ஓட்டு இரண்டு!

சண்டிகர், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் உள்ளன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக 24 … Read more

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..!

தங்கம் விலையானது ரஷ்யா உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த ஓராண்டில் 10 கிராமுக்கு 50,123 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், வரவிருக்கும் வாரத்தில் புராபிட் புக்கிங் காரணமாக சரிவினைக காணலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. மீடியம் டெர்ம் இலக்கு ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் புராபிட் … Read more

வாக்களிக்கும் போது வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மேயர்; வழக்கு பதிவு செய்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு மூன்றாம் கட்டமாக நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், கான்பூர் பகுதியின் மேயர் பிரமிளா பாண்டே இன்று கான்பூரில் உள்ள ஹட்சன் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளார். வக்களிக்கும் போது எடுக்கப்பட்ட புகப்படம், அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்குப்பதிவு செய்வதை வீடியோவாகவும், … Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்! மணமகன் உட்பட அனைவரும் பலி- திருமணத்துக்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள சோட்டி புலியா பாலத்தில் இருந்து சம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புப்படையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமண நிகழ்வுக்காக சென்ற போது நடந்த இந்த விபரீத சம்பவம் கடும் … Read more

60 வயதில் விளம்பர மாடலாக வலம்வரும் கூலித் தொழிலாளி மம்மிக்கா

கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மம்மிக்கா இவருக்கு வயது 60. கேரளாவின் வீதிகளில் லுங்கி சட்டையுடன் அன்றாடம் நடந்து செல்லும் கூலித் தொழிலாளியான மம்மிக்காவைக் கண்ட ஒருவர் அவரது அனுமதியுடன் அவரை புகைப்படம் எடுத்து தனது ஸ்டூடியோ-வில் வைத்திருந்தார். ஆறு மாதம் கழித்து மேலும் சில புகைப்படங்களை அவர் எடுக்க இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிரபல புகைப்படக் கலைஞரான ஷரீக் வாலயில் விளம்பர மாடலாக நடிக்க இவரை அணுகினார். விளம்பர மாடலாக நானா ? என்று ஆச்சரியத்தில் … Read more