40 வருட உச்சத்தில் பணவீக்கம்.. மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா..!

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. 5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா? குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்காவில் எரிபொருள், உணவு, ரியல் எஸ்டேட், நகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்ததன் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. அமெரிக்கப் பணவீக்கம் அமெரிக்காவின் பிப்ரவரி … Read more

“ஏழைகள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓய்வெடுக்கப் போவதில்லை!" – வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை பா.ஜ.க-வின் தேசிய தலைமையகத்திற்குச் சென்றார். நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வினர் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரதமர் மோடி பாராட்டினார். வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இது உற்சாகமான பண்டிகைகளின் நாள். இந்த உற்சாகம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கானது. … Read more

உலகளவில் அதிகம் விற்பனையாகும் Smartphone இதுதான்! வெளியான ஆச்சரிய பட்டியல்

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஐபோன்12 போன் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து 2-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. 3-வது இடத்தில் ஐபோன் 13, 4-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ, 5-வது இடத்தில் ஐபோன் 11 அதிகம் விற்கப்பட்ட போன்களாக இருக்கிறது. டாப் 10 போன்கள் பட்டியல் கீழே, Source link

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!!

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை என்னும் ஊரில் அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது.   கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கரமனை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.  இக் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. அருள்மிகு தர்ம சாஸ்தா திருக்கோயிலில் மூலவரின் விமானம் சிலந்தி வலை போன்று கூம்பு வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு.  இத்தலத்தின் கருவறையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவர்களின் நடுவில் பலகணி (ஜன்னல்) … Read more

644 அங்கன்வாடிகளுக்கு அடிப்படை வசதி இல்லை| Dinamalar

கொப்பால்-பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களில், 548 மையங்களுக்கு சொந்த கட்டடங்கள் இல்லை. 644 மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை.பெங்களூரு நகர மாவட்டத்தில், மொத்தம் 2,587 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் 1,444, நகராட்சி, டவுன்சபை எல்லையில் 169, கிராம பஞ்சாயத்து கட்டுப்பாட்டில், 974 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன.தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடிகளில் 548 தனியார் மையங்களில் இயங்குகின்றன. இதற்காக அரசு மாதந்தோறும் 6,000 ரூபாய் வாடகை வீதம், லட்சக்கணக்கான ரூபாய் செலுத்துகிறது. … Read more

உக்ரைன் போர்… 8 தளபதிகள் மீது புடின் கடுங்கோபம்: பாய்ந்த நடவடிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய துருப்புகள் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் முதன்மை தளபதிகள் 8 பேர்கள் மீது புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியில் முடிந்த உளவுப்பிரிவு நடவடிக்கை, மோசமான திட்டமிடல் என உக்ரேனில் போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டுள்ளன. குறிப்பிட்ட நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவாரததும், சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை வகுக்காததும் பின்னடைவுக்கு காரணம் என கண்டறிந்த விளாடிமிர் புடின் தற்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியதாக தகவல் … Read more

மார்ச்-11: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உக்ரைன் தலைநகரை மிருகத்தனமாக நெருங்கும் ரஷ்ய துருப்புகள்

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்ய துருப்புகள் மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகர எல்லையில் இருந்து வெறும் 3 மைல்கள் தொலைவில் தற்போது ரஷ்ய துருப்புகள் நிலை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைன் தலைநகரை இலக்காக கொண்டு ரஷ்யாவின் 40 மைல்கள் நீண்ட டாங்கிகளின் அணிவகுப்பு தற்போது நகரத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் தரப்பில் எதிர் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மேற்கு நகரமான … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,049,964 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.49 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,049,964 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 452,933,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 387,378,127 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 67,395 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.