நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை … Read more

பிப்-20: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரித்தானியாவில் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த நபர் குறித்து வெளியான சோக செய்தி!

பிரித்தானியாவில் யூனிஸ் புயலால் மரம் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த இளைஞர் குறித்த தகவல்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் Hampshire மாநிலத்தைச் சேர்ந்த Alton நகரத்தில், Old Odiham சாலையில் வெள்ளிக்கிழமையன்று, யூனிஸ் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. 23 வயதே ஆகும் அவரது பெயர் Jack Bristow. மணிக்கு 122 மைல் வேகத்தில் பிரித்தானியவை தூக்கிச் சென்ற யூனிஸ் புயலில் உயிரிழந்த 4 பேரில் இவரும் ஒருவர். சோகமான … Read more

முதல்வர் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் மாணவர் சங்க தலைவர் கைது! இது தெலுங்கானா சம்பவம்….

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்மீது கழுதையை திருடியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் கழுதையின் உடலில் கேசிஆர் போஸ்டரை ஒட்டி, … Read more

தமிழகத்தில் 60.70 சதவீத வாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை … Read more

உ.வே.சா பிறந்தநாளில் அவரின் தொண்டை போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள்; சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முத்து ரத்தினம் பள்ளியில் இன்று ரத்ததான முகாம்| Dinamalar

புதுச்சேரி, : முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது.கவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், 7 நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று காலை 9:00 மணி முதல், பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெறுகின்றது.ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர், கொடையாளர்களிடம் இருந்து ரத்தம் தானம் பெறுகின்றனர்.ரத்த தானம் செய்வோர், 24ம் தேதி மாலை நடைபெறும் முகாம் நிறைவு விழாவில் கவுரவிக்கப்படுவர். புதுச்சேரி, … Read more

உக்ரைன் எல்லையில் அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா.. அதிகரிக்கும் பதற்றம்..

உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் ரஷ்யா அணு ஆயுத பயிற்சியை மேற்கொண்டுவருகிறது. உக்ரைன் – ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் பபாயம் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் … Read more

வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்து தகராறு: திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் அதிகாரிகள், போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்

சென்னை: வாக்குச்சாவடிக்கு 5மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித் திருந்த நிலையில், 5 மணிக்கு மேல் வந்து, தங்களை வாக்களிக்க அனுமதிக்குமாறு ஆளும்கட்சியினர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்  திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் நடந்தேறி உள்ளது. மேலும் கோவையிலும் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை … Read more

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது – டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் … Read more