மூட்டை நிறைய சில்லறை…“ஒரு சுஸூகி ஸ்கூட்டர் குடுங்க!'' அஸாமில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்

இருசக்கர வாகனம் வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் இருசக்கர வாகனத்தோடு நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். சின்ன வயதில் டிவிஎஸ் 50 -ன் கம்பியைப் பற்றியவாறு அப்பாவோடு பயணித்தது தொடங்கி தன் காதலியைப் பின் இருக்கையில் அமரச் செய்து ஒட்டிச் செல்வது வரை… சினிமா காட்சிகள் யோசித்தால்கூட ஒரு இருசக்கர வாகனம் இன்றி காட்சி இருக்காது. அப்படியான இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? அஸாம் மாநிலம் பர்பேட்டாவைச் சேர்ந்த … Read more

கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் தள்ளாடியபடி தரையிறங்கிய விமானம்: பிரித்தானியாவில் நடந்த பரபரப்பு சம்பவம்

பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்குதலின் நடுவே ஹீத்ரோ விமான நிலையத்தில் பல தள்ளாட்டங்களுக்கு மத்தியில் விமானம் ஒன்று பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் யூனிஸ் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் மற்றும் Met வானிலை நிலையம் அறிவுறுத்திருந்தது. இந்தநிலையில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க வந்தது. “It’s the passengers you’ve got to think … Read more

சென்னை பெசன்ட்நகரில் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த கும்பல்… பரபரப்பு…

சென்னை:  பெசன்ட் நகரில் திமுகவினர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெசன்ட் நகரின் ஓடைக்குப்பம் பகுதியில் 179ஆவது வார்டில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமான நிலையில், சில இடங்களில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வாரி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல இடங்களில் … Read more

யாரும் கள்ள ஓட்டு போடவில்லை- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

சென்னை: தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது என்றும், இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில், சம்பந்தப்பட்ட வார்டில் மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்ட அதிமுகவினர்!: நடவடிக்கை கோரி திமுகவினர் சாலை மறியல்..!!

சென்னை: சென்னை மாநகராட்சி 179வது வார்டில் அதிமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீர் தீ..!

மதுபானி, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  ரெயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரெயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிழக்கு மத்திய ரெயில்வேயின் சிபிஆர்ஓ கூறியதாவது:-   காலி ரெயிலில் ஏற்பட்ட தீ காலை 9.50 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் … Read more

கிரெடிட் கார்டு பயன்பாட்டை குறைத்த மக்கள்.. ஜனவரி, பிப்ரவரி மாதம் சரிவு..!

இந்திய மக்கள் பண்டிகை காலத்திற்குப் பின்பு தொடர்ந்து செலவுகளைக் குறைத்து வருகின்றனர் குறிப்பாகக் கிரெடிட் கார்டு மூலம் மக்கள் செலவு செய்யும் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாகக் கொரோனா தொற்றுக் காரணமாகக் கட்டுப்பாடுகள் அதிகளவில் குறைத்துள்ள வேளையில் மக்கள் கிரெடிட் கார்டை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..! கிரெடிட் கார்டு 2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி … Read more

`500 புத்தகங்கள் வாங்கணும்' – இயக்குநர் வசந்தபாலன் #ChennaiBookFair

“ஒரு 500 புக் இருக்கு… 5 மட்டும் எப்படி சொல்ல முடியும்” என ஆரம்பிக்கும் போதே உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களின் இயக்குநர். “அரிதான புத்தகங்கள் தான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருக்கும். வழக்கமா புத்தகக் கடைகளில் கிடைக்காத புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அப்படியான அரிதான புத்தகங்களைத் தேடி தேடி வாங்குவேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் ஆரம்பக்கால புத்தக கண்காட்சிகளில் இருந்தே … Read more

நண்பனின் மனைவியை கொன்று சோபாவில் மறைத்து வைத்த கொடூரன்! பின்னர் நடந்தது என்ன?

இந்தியாவில் நண்பனின் மனைவியை கொலை செய்து ஷோபாவிற்கு பின்னாடி மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் வசித்து வந்தவர் சுப்ரியா ஷிண்டே. இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் திகதி தனது வீட்டின் ஷோபாவில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸ் கொலை செய்த நபரை குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணியை … Read more

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் … Read more