ரஷ்யாவை 'பயங்கரவாத நாடு' முத்திரை குத்திய ஜெலென்ஸ்கி., புதிதாக 3 உக்ரைன் நகரங்களில் தாக்குதல்..

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை “பயங்கரவாத” நாடு என்று முத்திரை குத்திய பிறகு, ரஷ்யா முதல் முறையாக மூன்று புதிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரின் 16-ஆம் நாளான இன்று, அதிகாலையில் தென்கிழக்கில் டினிப்ரோ (Dnipro) மற்றும் மேற்கில் லுட்ஸ்க் (Lutsk) மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) ஆகிய 3 நகரங்களில் புடின் படையினர் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய துருப்புக்கள் லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் உள்ள இரண்டு இராணுவ விமானநிலையங்கள் மீது … Read more

சீனாவில் புதிய வைரஸ் பரவல்: சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் புதிய வைரஸ் பரவல் காரணமாக சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து பரவியது. இந்த வைரஸ் பரவல் தற்போதுதான் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. புதிய வைரஸ் தீவிர பரவல்  காரணமாக அதை கட்டுப்படுத்தும் வகையில், மத்தியில் வடகிழக்கு தொழில்துறை மையமான சாங்சுனில் … Read more

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பஞ்சாப் முதல்வர் சன்னி

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி ஆபாரமாக வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 18 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் உடனான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கூட்டணியையும் ஆம் ஆத்மி சிதைத்தது. சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளையும், பாஜக 2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் பெற்றன. பஞ்சாப் மாநில முதல்வரான சரண்ஜித் சன்னி, பிரகாஷ் சிங் பாதல் … Read more

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் தீ விபத்து

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2-வது சுரங்கத்தில் மணல் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வாயால் கெட்ட ஓலா.. 8 மிஸ்டு கால் நோட்டிபிகேஷனால் கடுப்பான மக்கள்..!

இந்த வேகமாக நகர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக உலகில் அனைத்தையும் வாய்ப்பாகவும், வர்த்தகமாகவும் பார்க்கும் எண்ணம் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது. அப்படி நாட்டின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா சமீபத்தில் செய்த ஒரு விளம்பரம் இணைய வாசிகள் மத்தியில் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து டிவிட்டர், லின்கிடுஇன் எனச் சமுக வலைத் தளத்தில் ஓலா-வை மக்கள் கழுவி கழுவி ஊற்ற துவங்கியுள்ளனர். இப்படி என்ன பிரச்சனை நடந்தது தெரியுமா..? மீண்டும் சரிவை … Read more

ட்ரோன் மூலம் தாக்கப்பட்ட சவுதி கச்சா எண்ணெய் நிலையம்! – பாதிப்புகள் குறித்து அறிக்கை

2019-ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு அரபு அமீரகங்களில் இருந்த எண்ணெய் நிலையங்கள் தான் இலக்காக இருந்தன. அப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அப்காய்க் எண்ணெய் ஆலையில் ஒரு பெரும் தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலுக்கு ஹவூதிகள் பொறுப்பேற்றனர். மேலும் இந்தக் தாக்குதலால் தினசரி உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. … Read more

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்! வெளியான திருமண புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ராகுல் சாஹாருக்கும், இஷானி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் தனது நீண்ட நாள் காதலியான இஷானி ஜோஹரை மார்ச் 9 அன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண விழாவின் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர்களின் திருமண ஆடைகள் நிகழ்ச்சியையே வைரலாக்கி வருகின்றன. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான தீபக் … Read more

2024 பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது! பிரசாந்த் கிஷோர் டிவிட்…

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது என பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து தேர்தல் சாணக்கியரான  பிரசாந்த் கிஷோர் டிவிட் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த  5 மாநில  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற  4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பாஜக கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று டெல்லி பாஜக தலைமை … Read more

பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை 24 மணி நேரமும் பார்வையிட்ட வேட்பாளர் தோல்வி

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அகிலேஷ் யாதவ் தலைவமையிலான கூட்டணி 120 இடங்களுக்கு மேல் பிடித்தது. வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற வாய்ப்புள்ளதாக கருதி, எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு  … Read more

சிபிஎஸ்இ 10மற்றும் 12-ம் வகுப்பு பருவத் தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம்.: தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி

சென்னை: சிபிஎஸ்இ 10மற்றும் 12-ம் வகுப்பு  2-வது பருவத் தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2-வது பருவத் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று சிபிஎஸ்இ  அறிவித்துள்ளது.