12,000 ரஷ்யர்களை வீழ்த்திய உக்ரைன்: இழப்பு மதிப்பீடு வெளியீடு

உக்ரைனில் இதுவரை குறைந்தது 12,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவ படை தெரிவித்துள்ளது. உக்ரைனிய ஆயுதப் படைகள் தெரிவித்ததாக தி கீவ் இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் ரஷ்ய இராணுவத்தின் இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 10-ஆம் திகதி வரை தோராயமாக 12,000 ரஷ்ய துருப்புகள் வீழ்த்தப்பட்டனர். மேலும் ரஷ்யாவின் 49 போர் விமானங்கள், 81 ஹெலிகாப்டர்கள், 3,35 டாங்கிகளை உக்ரைனிய இராணுவம் வீழ்த்தியுள்ளது. மேலும், 123 பீரங்கிகள், வீரர்களை ஏற்றிச்செல்லக்கூடிய 1,105 இராணுவ … Read more

மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது! தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது; பெண்கள் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என தெலுங்கானா மாநில கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய தெலுங்கானா மற்றும்  புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து தினமுமே பெண்களுக்கான … Read more

படுதோல்வியால் சோனியா எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி- விரைவில் செயற்குழு கூடுகிறது

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பெரிய சோதனையை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வெறும் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. பஞ்சாபில் 77 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் அது 18ஆக குறைந்து உள்ளது. அதுபோல மணிப்பூரில் 28 இடங்களை வைத்திருந்த நிலையில் அது 4ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோவாவில் 17 … Read more

சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு; தீவிர ஊரடங்கு அமல்

வுகாண்: சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தீவிர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

'கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு நன்றி' – அகிலேஷ் யாதவ்

லக்னோ,  உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.  கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் மொத்தம் 111 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடம் பிடித்துள்ளது. மேலும் 32.06 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் … Read more

ரஷ்யாவை விட்டு வெளியேறும் முதல் அமெரிக்க வங்கி – கோல்டுமேன் சாக்ஸ்..!

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷ்யா மீது கடுமையான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களும் அடுத்தடுத்துத் தடை விதித்தும், ரஷ்யாவை விட்டு வெளியேறியும் வந்தது. இந்நிலையில் அமெரிக்க வங்கிகளும் தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் மற்றும் நிதி வர்த்தகத்தை விட்டுவிட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் படி அமெரிக்காவின் இரு முக்கிய வங்கிகள் ரஷ்யாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. … Read more

`சிறந்த விவசாயிகளுக்கு பரிசுத் தொகை!' – தமிழக அரசு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயத்தில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், புதிய எந்திரங்களைக் கண்டுபிடித்தல், இயற்கை முறையில் வேளாண்மை செய்வது மற்றும் விலை பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டிலிருந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பரிசளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் சமயமூர்த்தி அறிக்கை … Read more

உக்ரைன் போர்! ரஷ்யாவிற்கு எதிராக கனடா, பிரித்தானியா பொங்கிய நிலையில் இந்தியா நடுநிலை வகித்தது ஏன்?

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்தது ஏன் என்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் சண்டை தொடரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாகவும் கனடா, பிரித்தானியா, பிரானா, இத்தாலி போன்ற நாடுகள் ஐ.நா தீர்மானத்தில் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரத்தில் இரு நாட்டுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவிக்காத இந்தியா நடுநிலை வகித்தது. இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி … Read more

5மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி.யில் மட்டும் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்பு….

டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உ.பி.யில் மட்டும் சுமார் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களு நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நேற்று நடை பெற்றது. இதில், உ.பி, மணிப்பூர், உத்தரகண்ட் , கோவா மாநிலங்களில் … Read more

நிலஅபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார். இதையடுத்து இன்று ஜெயக்குமார் ஜாமின் மனு  மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் … Read more