நிலஅபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார். இதையடுத்து இன்று ஜெயக்குமார் ஜாமின் மனு  மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் … Read more

பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன்; சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன் என சரண்ஜித் சிங் சன்னி பேட்டி அளித்துள்ளார். புதிய அரசு தொடங்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்க ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு – சசிகலா இன்று நேரில் ஆஜர்

பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை அவர்கள் மூவரும் விடுதலையாகி விட்டனர்.   இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அம்பலப்படுத்தினார். சொகுசு வசதிகளை பெற சசிகலா ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.  அப்போது … Read more

தங்கம் விலை மீண்டும் சரிவு.. இனியும் குறையுமா.. இது வாங்க சரியான இடமா.. கணிப்பு என்ன?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலையானது கடந்த அமர்வில் காலை நேரத்தில் சரிவினைக் கண்டு இருந்த நிலையில், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டது. ஆக அதனை போலவே இன்றும் இருக்குமா? விலை குறையும்பட்சத்தில் வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்.கணிப்புகள் என்ன சொல்கின்றன. பரபர தேர்தல் முடிவுகள்.. … Read more

தகவல் தெரிவிக்காமல் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை? – இந்தியாவிடம் விளக்கம் கேட்கும் பாகிஸ்தான்

இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் ஹரியானா மாநிலம் சிறுசா நகரத்திலிருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து மியா சானு … Read more

சுவிஸ் வான்வெளியில் மின்னல் வேகத்தில் பறந்த போர் விமானங்கள்: திடுக்கிட்ட சுவிஸ் மாகாண மக்கள்

ஏற்கனவே ஒரு நாட்டில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென நம் நாட்டின் மீது போர் விமானங்கள் பறந்தால் நமக்கு எப்படி இருக்கும்? அதேபோலத்தான் நேற்று சுவிஸ் மாகாணம் ஒன்றின் மக்கள் திடுக்கிட்டுள்ளார்கள். ஆம், நேற்று மதியம் திடீரென ஜெனீவா வான் வெளியில் போர் விமானங்கள் இரண்டு வேகமாகப் பறந்து சென்றுள்ளன. குழப்பமடைந்த மக்கள் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே, தேடும் விளக்குகளை (searchlights) எரியவிட்டபடி இரண்டு ஹெலிகொப்டர்கள் பறந்துள்ளன. அடுத்து, இராணுவ டாங்க் ஒன்றின் பின்னால் வரிசையாக … Read more

5 மாநில தேர்தல் தோல்வி: விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்…

டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியால் குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார். தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பெரும் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தையும் இழந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடர் … Read more

ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் … Read more

ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்.27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை கைது செய்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; கெஜ்ரிவாலுடன் முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் சந்திப்பு

சங்ரூர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  பஞ்சாப் மாநில முதல்- மந்திரியான சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட சப்காப் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் தோல்வி கண்டார். துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் 58 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதன்பின்  வெற்றி உரையாற்றிய பகவந்த் மான் தன்னுடைய பதவியேற்பு விழா … Read more