38 பேருக்கு மரண தண்டனை! அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜூலை 26, 2008 அன்று, அகமதாபாத்தில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜூலை 26, 2008 அன்று நடந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற குழு பொறுப்பேற்றது. இதனிடையே, இந்த மாத … Read more

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும் மோடி அரசு…! ஆடியோ

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் சித்தனையுடைய பாஜக அரசு அவதூறு வீசுவதை கண்டிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. அத்துடன் நேருவின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதையும் விளக்கி உள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/02/Pari-Audio-2022-02-18-at-1.11.52-PM.ogg

வெளி ஆட்கள் தங்கி இருக்கிறார்களா?: என ஆய்வு- லாட்ஜூகளில் போலீசார் விடிய விடிய சோதனை

சென்னை: தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் அதன் பிறகு வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தங்கக் கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோன்று யாராவது தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், … Read more

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை படைத்துள்ளார். மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 405 பந்துகளில் 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்…!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?!

இந்திய ஐடி துறை கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த அதிகப்படியான வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்து வரும் அதிகப்படியான திட்டங்கள் மட்டுமே காரணமாக உள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் கிடைத்து வரும் காரணத்தால் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்டு அதிகரித்த வேளையில் சக போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஈர்க்க துவங்கியது இதனால் ஐடி நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் உச்சத்தைத் … Read more

மைனஸ் 15 டிகிரி குளிரில் மக்கள்; ரகசிய ஹீட்டர் மேல் நின்று குடும்பப் பெருமை பாடிய கிம் ஜாங் உன்!

மறைந்த முன்னாள் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் இல்-ன் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை, சாம்ஜியோன் நகரில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்களை உறையவைக்கும் கடும் குளிரில் நிற்கவைத்து அவருடைய தந்தையின் புகழ் பற்றிப் பேசியிருக்கிறார். கிம் தனது குடும்பத்தைப் பற்றி சுமார் 30 நிமிடங்கள் வரை அந்த நிகழ்ச்சியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குளிர் `மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்’ என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி … Read more

சென்னையில் பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ள  பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  சென்னையில் மட்டும், கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல்படையினர் என மாநகரம் முழுவதும் கூடுதலாக மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்களுக்கும் … Read more

5 நதிகளை இணைக்க டெல்லியில் இன்று ஆலோசனை: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்கு பெரிய வரப்பிரசாதம்

சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக … Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.