"நான் 2 குழந்தைகளுக்கு தந்தை" ரஷ்யா குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் இரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று கூறியுள்ளார். மேலும், உயிரியல் ஆயுதங்களை தனது நாட்டிற்கு எதிராக பயன்படுத்தினால் “மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள்” விதிக்கப்படும் என்று ரஷ்யாவை எச்சரித்துள்ளார் ஜெலென்ஸ்கி. அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனில் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி நடந்துவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசியுள்ளார். தான் ஒரு வளமான நாட்டின் ஜனாதிபதி, … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின்படி, திருச்சியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று., சென்னை ராயபுரத்தில், கள்ள ஓட்டுப் போட முயன்றதாக,  திமுக நபர் நரேஷ் என்பதை பிடித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில்,அவரது  சட்டையை கழற்றி, சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயகுமார் … Read more

பஞ்சாபில் அசுர வெற்றி- அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டிய கமல்ஹாசன்

சென்னை: உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்காக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் 4 மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் … Read more

சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 2016 தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்ததாக கருணாகரன் என்பவர் புகார் அளித்து இருந்தார். பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காதலனை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது…!

திருப்பதி, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 22 வயது வாலிபர் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.  இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் மதுபோதையில் கடற் கரைக்கு வந்தனர். காதலர்கள் 2 பேரும் … Read more

3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்த தீர்வுகள் எடுக்கப்படாத நிலையில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அதிகப்படியான நிதியுதவியை அளித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களைத் தாய் நாட்டிற்குத் திரும்ப அழைக்கும் பணி அதிதீவிரமாக நடந்து வரும் வேளையில் இரு நாட்டு ராணுவமும் கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான … Read more

விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 477-ஐ நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 60 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெற்றது. இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க, … Read more

புடினைக் கைவிட்ட நட்பு நாடு: ரஷ்யாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதிலும் பகையை சம்பாதித்துக்கொண்டுள்ள ரஷ்யா, நட்பு நாடுகளின் ஆதரவையும் இழந்துவருவதாகத் தோன்றுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், அமெரிக்கா மீதான பகை முதலான காரணங்களால் நட்பு நாடுகளான சீனா ரஷ்யா நட்புக்கு, தற்போது உக்ரைன் போரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், ரஷ்யாவுக்கு விமான உதிரி பாகங்களை வழங்க சீனா மறுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் விமானத்துறை, மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக பாதிக்கபட்டுள்ளதை மாஸ்கோ அலுவலர் ஒருவர் … Read more

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள்! ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான மாநாட்டில் கூறினார். தமிழக தலைநகர் சென்னையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு நேற்று (மார்ச் 10ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டின் … Read more

தோ‌ஷத்தால் நோய் பாதிப்பு?- காதல் கணவரை காப்பாற்றுவதாக எண்ணி உயிரை மாய்த்த இளம்பெண்

கோவை: கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி(வயது21). இவரும் காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும் பார்த்திபன்(25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இதனை … Read more