ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க தலைவர் சோமையா தனது எழுத்துப்பூர்வ அறிக்கையுடன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை … Read more

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் – டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்கே பழைய சீமாபுரி பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு உரிய வகையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதுபற்றி தேசிய பாதுகாப்புப் படைக்கு தெரிவித்தனர் இதையடுத்து, போலீசார் சம்பவ இடம் சென்று சோதனையிட்டனர். அதில், 3 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று இருந்தது. இந்த வெடிகுண்டில் அம்மோனியம் நைட்ரேட், ஆர்.டி.எக்ஸ் மற்றும் டைமர் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்பின் தேசிய பாதுகாப்புப் படையினர் அந்த வெடிகுண்டை வேறு இடத்திற்கு கொண்டு சென்று செயலிழக்கச் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பரப்புரை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை திமுக 9 மாத கால ஆட்சியில் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெஸ்லாவுக்கு மீண்டும் கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா.. வசமாக சிக்கிய எலான் மஸ்க்..!

அமெரிக்காவின் வாகன பாதுகாப்பாளர்கள் டெஸ்லாவினை மீண்டும் தனது விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த முறை இதற்கான வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி, வாகனங்கள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் Y கார் குறித்து தான் தற்போதும் பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த கார்கள் குறித்து 354 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. … Read more

பஞ்சாப்: `முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் நீக்கப்பட்டது இதனால்தான்…' – ரகசிய உடைத்த ராகுல்!

2017-ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தவர் பஞ்சாப்பின் அமரீந்தர் சிங். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும் அமரீந்தர் சிங் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அமரீந்தர் சிங் அறிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் … Read more

உக்ரைனுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா எடுத்த அதிரடி நடவடிக்கை! எதிர்வினையாற்ற தயாராகும் அமெரிக்கா

 உக்ரைன் உடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க துணை தூதர் பார்ட்லே கோர்மனை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் Jason Rebholz மேற்கோள் காட்டி RIA இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் (டிசிஎம்) பார்ட் கோர்மனை ரஷ்யா வெளியேற்றியது. கோர்மன் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதருக்குப் பிறகு இரண்டாவது மிக மூத்த அதிகாரி மற்றும் தூதரகத்தின் மூத்த தலைமையில் … Read more

கீழடியில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாயம் … Read more

தமிழகத்தில் மேலும் 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு- 6 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 1,310 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கில் மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. களத்தூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சொத்தை அண்ணனுக்கு எழுதிவைத்ததால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்துள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.6% ஆக சரிவு.. ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறையின் முன்னணி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை பெற துவங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து மீண்டு வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தப்படாத துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் வேலைவாய்பின்மை ஜனவரி மாதத்தில் சரிந்துள்ளது. 4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ஜனவரி மாதம் … Read more