தலைநகரை நெருங்கிய ரஷ்ய படையினரை துவம்சம் செய்த உக்ரைன் இராணுவம்: தலை தெறிக்க தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்

உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. உக்ரைன் தலைநகரான Kyivஐக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. அதற்காக, நேற்று இரவு, சுமார் 30 டாங்குகளுடன் ரஷ்ய வீரர்கள் Kyivஐ நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக, திடீரென உக்ரைன் வீரர்கள் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கனரக ஆயுதங்கள் மூலம் முன்னும் பின்னும் தாக்குதல் நடந்த, மிரண்டுபோன ரஷ்ய வீரர்களில் உயிர் தப்பியவர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளார்கள். … Read more

5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….

டெல்லி:  5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து  காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத நிலையில், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது முதல், மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். … Read more

மக்கள்தான் எஜமானர்கள்: 2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். சமூக விரோத சக்திகள், கூலிப்படைகளை இரும்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று பேசினார். இன்று 2-வது நாளாக கலெக்டர்கள் மாநாடு தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற கலெக்டர்களை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்று பேசினார். … Read more

பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் காணொளி மூலம் முதல்வர் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் முதன்மை பல்கலைக்கழமாக பாரதியார் பல்கலை. விளங்குகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டமாற்று முறைக்கு சித்ரதுர்கா விவசாயிகள் தயார்; வாங்கிய கடனுக்கு வங்கிகளில் டிபாசிட் செய்ய முடிவு| Dinamalar

பெங்களூரு-விவசாய பணிகளுக்காக தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெறுகின்றனர். பல காரணங்களால் நஷ்டமடையும் அவர்கள், கடனுக்கு பதிலாக, ‘பண்டமாற்று முறையில்’ தாங்கள் விளைவிக்கும் விளைச்சலை, கடன் வாங்கிய வங்கியில் செலுத்தி, சித்ரதுர்கா மாவட்ட விவசாயிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்காக விவசாய கூட்டுறவு, தனியார் வங்கிகளிடம் கடன் பெறுகின்றனர்.கடன் வாங்கி தங்கள் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள், மழை, வெயில், பூச்சி, விலங்குகள் … Read more

‘ஸ்மார்ட் பஜார்’ முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. மார்ச் 31-க்குள் அதிரடி அறிவிப்பு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே பியூச்சர் குரூப்-ன் 200 கடைகளைக் கைப்பற்றிய நிலையில், நேற்று 950 கடைகளுக்கான சப்லெட் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து உள்ளது. இதனால் பியூச்சர் குரூப் இந்த 950 கடைகளுக்கான குத்தகை பணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் இல்லையெனில் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாமல் ரத்தாகும். இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்த 950 கடைகளையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த 950 கடைகளையும் புதிய பிராண்டின் கீழ் வர்த்தகம் செய்யத் … Read more

“ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிப்பது ஏன்?” – விளக்கிய பிரதமர் மோடி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.கவின் வெற்றி கூடத்தில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  8.12 லட்சம் சோதனை- பாதிப்பு 4,194

டில்லி இந்தியாவில் 8,12,365 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,194 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,84,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 255 அதிகரித்து மொத்தம் 5,15,714 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 6,208 பேர் குணமடைந்து இதுவரை 4,24,26,328 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 42,249 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 16,73,515 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது

சென்னை: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதிக்குள் வட்டார தலைவர்கள், பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜூலை 21-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் மாநில பொதுக்குழு, செயற்குழு, மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில தலைவர்களுக்கான தேர்தல் … Read more

போதிய பயிற்சியில்லாதோர் ரஷ்யாவுடன் போரிட களத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்

உக்ரைன்: ராணுவத்தில் சேர்ந்த போதிய பயிற்சியில்லாதோர் ரஷ்யாவுடன் போரிட களத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களால்தான் ரஷ்ய ராணுவத்தை இதுவரை தடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.